கேபிள் டிவி சங்கத் தலைவர் கொலை-தென்காசியில் பதட்டம்

தென்காசியில் கேபிள் டிவி ஆபரேட்டர் சங்க தலைவராக இருந்தவர் முகமது மைதீன்(56). இவர் தென்காசி அம்மன் சன்னதி அருகே கேபிள் டிவி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். அந்த நிறுவனத்துக்குள் இன்டர்நெட் பிரவுசிங் மையம் ஒன்றையும் நடத்தி வருகிறார்.
இந்நிலையில் நேற்று மதியம் 12.40 மணிக்கு இரண்டு பேர் பிரவுசிங் செய்ய வந்துள்ளனர். அப்போது அவர்கள் யாருக்கும் தெரியாமல் அரிவாளை ஒழித்து வைத்து கொண்டுவந்துள்ளனர்.
சுமார் 30 நிமிடம் வரை பிரவுசிங் செய்த அவர்கள் பின்னர் பணத்தை கொடுத்துள்ளனர். அதை வாங்கி பத்திரமாக வைக்க முயன்ற சமயத்தில், மைதீன் எதிர்பாராத நிலையில் அரிவாளை எடுத்து அவரை சராமரியாக வெட்டியுள்ளனர். பின்னர் அந்த மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இதில் பலத்த காயமடைந்த மைதீன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். அவரது தந்தை அப்பகுதி ஐக்கிய ஜமாத் தலைவராக இருக்கிறார். இதையடுத்து தென்காசி பஜாரில் கடைகள் அடைக்கப்பட்டன.
சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் துப்பு துலக்கி வருகின்றனர். கொலைக்கு குடும்ப பிரச்சினை அல்லது தொழில் போட்டி காரணமாக இருக்குமா என விசாரித்து வருகின்றனர்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications