போரை நிறுத்த இலங்கைக்கு பான் கி மூன் கோரிக்கை
நியூயார்க்: இலங்கையில் உயிருக்கு போராடி வரும் தமிழர்களுக்கு உணவு, மருந்து வினியோகம் செய்வதற்கு உதவும் வகையில் இலங்கை ராணுவம் போரை நிறுத்த வேண்டும் என ஐநா பொது செயலாளர் பான் கி மூன், இலங்கை அதிபர் ராஜபக்சேவிடம் கூறியுள்ளார்.
இலங்கையில் விடுதலை புலிகளுக்கு எதிரான போர் என்ற பெயரில் ராணுவமும் ஆயிரக்கணக்கில் தமிழர்களை கொன்று குவித்த வருகிறது. இதற்கு உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதை தொடர்ந்து ஐநா, இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் போரை நிறுத்த வலியுறுத்தின. ஆனால், இலங்கை அரசு அதை உடனடியாக மறுத்துவிட்டது. இந்நிலையில் ஐநா பொது செயலாளர் பான் கி மூன், இலங்கை அதிபர் ராஜபக்சே இடம் நேரடியாக தொலைபேசியில் பேசியுள்ளார். அப்போது அவர் போர் நிறுத்தம் செய்யுமாறு வலியுறுத்தியுள்ளார்.
இதன்பின்னர் நேற்று நியூயார்க்கில் பான் கி மூன் கூறுகையி்ல்,
இலங்கை பிரச்சினையை தினமும் கவனித்து வருகிறேன். இன்று காலை இலங்கை அதிபர் ராஜபக்சேவுடன் தொலைபேசியில் பேசினேன்.
இலங்கையில் போர் பகுதியில் உணவு மற்றும் மருந்து பொருட்கள் இல்லாமல் தவிக்கும் தமிழர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்குவதற்காக இலங்கை அரசு போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என வலியுறுத்தினேன். இதனால் ஐநா குழுவினருக்கு அப்பகுதியை ஆரய வாய்ப்பு கிடைக்கும்.
மக்களின் பாதுகாப்பை கவனத்தில் கொண்டு கனரக ஆயுதங்கள், ஏவுகணைகளை உபயோகப்படுத்த வேண்டாம் என கேட்டுகொண்டேன். அதே நேரத்தில், சிறுவர்களை படைகளில் சேர்ப்பதை, விடுதலைப்புலிகள் தவிர்க்க வேண்டும், போர் நடைபெறும் பகுதியில் இருந்து பொதுமக்கள் வெளியேற விடுதலைப்புலிகள் அனுமதிக்க வேண்டும்.
இலங்கையில் சர்வதேச மனித உரிமை விதிகள் மதிக்கப்பட வேண்டும். பொது மக்களின் பாதுகாப்பு முன்னுரிமை கொடுக்க வேண்டும். இலங்கையில் சர்வதேச விதிமுறைகள் மீறப்படுகிறதா என்பதை உலகமே கவனித்து வருகிறது என்றார் பான் கி மூன்.
பான் கி மூனுக்கு இலங்கை வர அழைப்பு...
அதன் பின்னர் கொழும்புவில் ராஜபக்சே நிருபர்களிடம் பேசுகையில்,
ஐநா பொது செயலாளர் பான் கி மூனை இலங்கைக்கு வருமாறு கடிதம் ஒன்றும் அனுப்பியுள்ளேன். அவர் தொலைபேசியில் பேசிய போதும் அவரை மீண்டும் அழைத்தேன். இலங்கையில் தமிழர்களுக்கு ராணுவ முகாமில் செய்து கொடுக்கப்பட்டுள்ள வசதிகளை வந்த பார்வையிடுமாறு கூறினேன்.
அவர் இலங்கை வந்தால் தமிழர்களுக்கு கூடுதல் உணவுப்பொருள், மருந்து பொருட்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. அவர் நிவாரண முகாம்களில் தமிழர்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதையும் தெரிந்து கொள்ள முடியும்.
விடுதலைப்புலிகள் பல ஆயிரம் தமிழர்களை கேடயமாக பயன்படுத்தி வருகின்றனர். அவர்களை மீட்க வேண்டும் எனவும், அதற்கான மனிதாபிமான உதவிகளை செய்யுமாறு அவரிடம் கூறினேன்.
அவர் இலங்கை வரும் தேதி இன்னும் முடிவாகவில்லை. ஆனால், அவரது வருகையால் இலங்கைக்கும், ஐநாவுக்கும் உள்ள உறவு வலுப்பெறும் என்றார்.
-
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ்












Click it and Unblock the Notifications