உதவி சப் இன்ஸ்பெக்டர் ஓம்ப்ளேவை ஏகே47 துப்பாக்கியால் சுட்டான் கசாப் - எஸ்.ஐ. சாட்சியம்
மும்பை: மும்பை தீவிரவாதத் தாக்குதல் வழக்கில் சாட்சிகளின் விசாரணை இன்று தொடங்கியது. தீவிரவாதி முகம்மது அஜ்மல் அமீர் கசாப், உதவி சப் இன்ஸ்பெக்டர் துக்காராம் ஓம்ப்ளேவை, ஏ.கே. 47 துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதாக சப் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் கடம் இன்று சாட்சியம் அளித்தார்.
மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் தீவிரவாத தாக்குதல் வழக்கில் இன்று சாட்சிகளின் விசாரணை தொடங்கியது.
அப்போது சப் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் கடம் முதல் நபராக சாட்சியம் அளித்தார்.
அவர் கூறுகையில், கடந்த ஆண்டு நவம்பர் 26ம் தேதி கிர்கான் செளபாத்தி என்ற இடத்தில் உதவி சப் இன்ஸ்பெக்டர் ஓம்ப்ளேவை, கசாப் ஏ.கே. 47 துப்பாக்கியால் சுட்டுக் கொன்றான்.
ஸ்கோடா காரில் தப்பிச் சென்ற தீவிரவாதிகளை பிடிக்க முயற்சித்த காவல் அதிகாரிகளில் நானும் ஒருவன். நான் காரில் இருந்த தீவிரவாதி அபு இஸ்மாயிலை நோக்கி துப்பாக்கியால் சுட்டேன். அந்தக் காரில் கசாப்பும் இருந்தான்.
துப்பாக்கிச் சூட்டில் இஸ்மாயில் காயமடைந்தான். கசாப் முன் பக்க கதவைத் திறந்து இடது பக்கமாக வெளியே வந்தான். பின்னர் கீழே விழுந்தான்.
இதையடுத்து கசாப்பை நோக்கி ஓம்ப்ளே மற்றும் இன்னொரு காவல்துறை அதிகாரியான சஞ்சய் கோவில்கர் ஆகியோர் சென்றனர். அப்போது கசாப், திடீரென ஓம்ப்ளேவை நோக்கி சரமாரியாக சுட்டான்.
இதில் ஓம்ப்ளே படுகாயமடைந்து கீழே விழுந்தார். இதையடுத்து மற்ற போலீஸார் கசாப்பை லத்திகளால் சரமாரியாக தாக்கி அவனை நிலை குலையச் செய்தனர். அவனிடமிருந்த ஏ.கே. 47 துப்பாக்கியையும் பறித்து விட்டனர்.
காயமடைந்த ஓம்ப்ளே மற்றும் கோவில்கர் ஆகிய இருவரும் அருகில் இருந்த மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். இஸ்மாயில், கசாப்பையும் இன்னொரு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர் என்று வாக்குமூலம் அளித்தார் கடம்.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications