ஜெ. ஹெலிகாப்டரால் மீண்டும் சிக்கல் - காரில் பயணம்
கடலூர்: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா பயணம் செய்த ஹெலிகாப்டரில் கோளாறு ஏற்பட்டதால் அவர் காரில் சென்னைக்குப் பயணமானார்.
2 நாட்களுக்கு முன்பு பிரசாரத்தை முடித்து விட்டு ஜெயலலிதா சென்னைக்கு வந்து கொண்டிருந்தபோது திடீரென ஹெலிகாப்டரில் எரிபொருள் தீர்ந்து போனது. இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் இறங்கி அங்கிரு்நது கார் மூலம் வீடு திரும்பினார் ஜெயலலிதா.
இந்த நிலையில் நேற்று கடலூருக்கு பிரசாரத்திற்கு வந்த ஜெயலலிதா முடித்து விட்டு சென்னை திரும்பவிருந்த நிலையில் ஹெலிகாப்டரில் கோளாறு ஏற்பட்டதால் காரிலேயே சென்னை திரும்பினார்.
ஜெயலலிதா நேற்று புதுச்சேரியில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசி விட்டு மதியம் 2 மணி அளவில் சிதம்பரத்துக்கு ஹெலிகாப்டரில் புறப்பட்டு வந்தார்.
அவர் பயணம் செய்த ஹெலிகாப்டரில் உள்ள திசைகாட்டும் கருவி பழுதடைந்ததால், சிதம்பரத்தில் அமைக்கப்பட்டு இருந்த ஹெலிபேடில் இறங்க முடியாத நிலைமை ஏற்பட்டது. இதனால் சிதம்பரத்தில் தரை இறங்காமல் கடலூருக்கு வந்தனர். கடலூர் அண்ணா ஸ்டேடியத்தில் மதியம் 2-15 மணிக்கு ஹெலிகாப்டர் தரை இறங்கியது.
இதைத்தொடர்ந்து ஹெலிகாப்டரின் திசைகாட்டும் கருவியில் ஏற்பட்டு இருந்த பழுது நீக்கப்பட்டது. அதுவரை ஜெயலலிதாவும், சசிகலாவும் காரில் அமர்ந்து இருந்தனர். 2-55 மணிக்கு அவர்கள் இருவரும் ஹெலிகாப்டரில் சிதம்பரத்துக்கு புறப்பட்டு சென்றனர்.
சிதம்பரத்தில் பொதுக்கூட்டத்தை முடித்து விட்டு மாலை 4-15 மணிக்கு ஜெயலலிதா ஹெலிகாப்டரில் கடலூருக்கு வந்தார். அங்கு மஞ்சக்குப்பம் மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிவிட்டு மாலை 5 மணிக்கு கார் மூலம் அண்ணா ஸ்டேடியத்துக்கு சென்று ஹெலிகாப்டரில் ஏறி அமர்ந்தார்.
ஆனால் திசைகாட்டும் கருவி மறுபடியும் செயல் இழந்ததால் அவர் ஹெலிகாப்டரில் இருந்து இறங்கி காரில் அமர்ந்து இருந்தார்.
நீண்ட நேரமாகியும் கோளாறை சரி செய்ய முடியவில்லை. இதையடுத்து ஹெலிகாப்டரை விட்டு வி்ட்டு மாலை ஐந்தரை மணியளவில் அவர் கார் மூலம் சென்னை புறப்பட்டுச் சென்றார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications