அதிமுக வேட்பாளர் தம்பித்துரை வீட்டில் போலீஸ் திடீர் ரெய்டு
கரூர்: கரூர் தொகுதி அதிமுக வேட்பாளர் தம்பித்துரையின் வீட்டில் நேற்று நள்ளிரவு முதல் இன்று அதிகாலை வரை விடிய விடிய சோதனை நடந்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
தம்பித்துரை கரூர் தொகுதியில் போட்டியிடுகிறார். இவருக்குச் சொந்தமான வீடு, கரூர் ராமானுஜம் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ளது.
நேற்று இரவு பத்தரை மணியளவில் தம்பித்துரை வீட்டுக்கு எஸ்.பி. இளங்கோ தலைமையில் போலீஸார் வந்தனர்.
பின்னர் 12 மணியளவில் ஆர்.டிஓ. ஜெயராமன், தாசில்தார் தர்மராஜ், மற்றும் வருவாய் அலுவலர்கள் அங்கு வந்தனர்.
வாக்களர்களுக்கு கொடுக்க பணம் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாகவும், இதுதொடர்பாக சோதனை நடத்த வந்து இருப்பதாகவும் தெரிவித்தனர்.
தகவல் அறிந்ததும் அங்கு அதிமுகவினர் குவிந்தனர். சோதனை நடத்துவதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
கரூர் மாஜி திரேட் ஜெயந்தி கொடுத்த கடிதத்தை அதிமுகவினரிடம் காட்டிய போலீஸார், 1 மணியளவில் வீட்டுக்குள் புகுந்து சோதனையில் இறங்கினர்.
வீட்டில் உள்ள அனைத்து அறைகளிலும் சோதனை நடத்தப்பட்டது. பாத்ரூமைக் கூட விடவில்லை. ஆனால் அவர்கள் எதிர்பார்த்து வந்த எதுவும் கிடைக்கவில்லை. இதையடுத்து சோதனையை முடித்துக் கொண்டு அதிகாலை 4 மணியளவில் போலீஸார் சென்று விட்டனர்.
-
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications