'இளங்கோவன்'- இளந்தமிழர் இயக்கத்தினர் கைது

திரையுலக தமிழீழ ஆதரவு இயக்கம் சார்பில் இயக்குநர் சீமான் ஈரோட்டில் பொதுக்கூட்டத்தி்ல பேசினார். அங்கு போட்டியிடும் இளங்கோவனுக்கு வாக்களிக்கக் கூடாது என்று கோரி நடத்தப்பட்ட கூட்டம் இது.
அக்கூட்டத்தில் பேசிய சீமான், தந்தை பெரியார், காங்கிரசை தமிழகத்தை விட்டே துரத்த வேண்டும் என்று சொன்னார். ஆனால், அவரது பேரனோ காங்கிரசில் இருக்கிறார். அதனால் நான் தான் உண்மையான பேரன் என்றார்.
இதற்கு நக்கலாக பதிலளி்ப்பதாக நினைத்து, நான் தான் பெரியாரின் உண்மையான பேரன். ஆனால் சீமான் தன்னை பெரியாரின் பேரன் என்று சொல்லியிருக்கிறார். பெரியார் இளம் வயதில் செய்த தவறு செய்து விட்டார் என்று நினைக்கிறேன், அதனால்தான் சீமான் அப்படிப் பேசியிருக்கிறார் என்றார்.
இளங்கோவனின் இந்தப் பேச்சுக்கு தமிழர் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தன. இளந்தமிழர் இயக்கம் என்ற அமைப்பு, இளங்கோவனின் பேச்சைக் கண்டித்து வீட்டை முற்றுகையிடப் போவதாக அறிவித்தது.
இதனால் இளந்தமிழர் இயக்கத்தினரை போலீசார் கைது செய்துவந்தனர். ஈரோட்டில் உள்ள இளங்கோவன் வீட்டுக்குப் பாதுகாப்பு போடப்பட்டது.
இந்த நிலையில் இன்று காலை இளந்தமிழர் இயக்கத்தைச் சேர்ந்த 18 பேர் பன்னீர் செல்வம் பூங்காவிலிருந்து பேரணியாக இளங்கோவன் வீடு நோக்கி கிளம்பினர். அவர்களைப் போலீஸார் தடுத்து நிறுத்திக் கைது செய்தனர்.
இதையடுத்து மேலும் 10 பேர் பேரணியாக வந்தனர். அவர்களையும் போலீஸார் கைது செய்தனர். இதைத் தொடர்ந்து பெண்கள் உள்ளிட்ட 20 பேர் பேரணியாக வந்தனர். அவர்களை நிறுத்திய போலீஸார் கைது செய்யாமல் திருப்பி அனுப்பி விட்டனர்.
இளங்கோவன் வீடு முற்றுகைப் போராட்டத்தால் ஈரோட்டில் பதட்டமாக உள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications