உண்ட வீட்டிற்கு துரோகம் இழைத்தவர்தான் ஜெயலலிதா - ஆர்.எம்.வீ.
சென்னை: எனக்கு எல்லாமே எம்.ஜி.ஆர். தான் என்று ஒப்பாரி வைத்த ஜெயலலிதாதான், அவர் உயிருடன் இருந்தபோதே அன்றைய பிரதமர் அமரர் ராஜீவ்காந்திக்கு எம்.ஜி.ஆர். முதல்வராக இருக்க லாயக்கற்றவர் என்று கடிதம் எழுதி உண்ட வீட்டிற்கு துரோகம் இழைத்தவர் என்று கூறியுள்ளார் எம்.ஜி.ஆர். கழக நிறுவனர் ஆர்.எம். வீரப்பன்.
இதுதொடர்பாக ஆர்.எம்.வீரப்பன் வெளியிட்டுள்ள அறிக்கை:
5 ஆண்டுகள் இந்தியாவின் வளர்ச்சியும், அதைத்தொடர்ந்து 5-வது முறை முதல்-அமைச்சராக, 3 ஆண்டுகளாக ஆட்சிப்பொறுப்பில் உள்ள கருணாநிதியின் ஆட்சியில் தமிழகம் இதுவரை கண்டிராத வளர்ச்சியை பல துறைகளிலும் அடைந்து கொண்டு வருகிறது.
இவை எல்லாம், பழைய ஆட்சியில் ஆணவமும், அலட்சியமும் நிறைந்த கொடுமை மிக்க ஆட்சியில் நடைபெறவில்லை. அதனால்தான் அவர்கள் ஆட்சியில் இருந்தபோதே தமிழ் மக்கள் புத்தி கற்பித்து 40 இடங்களில் வெற்றி தேடி தந்தார்கள். பிறகு கடந்த சட்டமன்ற தேர்தலில் முதல்-அமைச்சர் பொறுப்பில் இருந்தும் ஜெயலலிதாவை விரட்டி அடித்தார்கள்.
படிப்பினை ஏற்படவில்லையே...
அப்படி விரட்டப்பட்ட மக்கள் விரோத சக்தியான ஜெயலலிதாவிற்கு படிப்பினை ஏற்படவில்லை. தேர்தலில் எத்தனை இடம் கிடைக்கும் என்று அலைந்து அரசியல் நடத்தும், இடம் தேடிகள் கிடைத்திருக்கிறார்கள் என்ற துணிச்சலில், 70 ஆண்டுகளாக, 14 வயதில் இருந்து இரவு பகலாக உழைப்பு, உழைப்பு என்று ஓய்வறியாமல் தமிழ் இனத்திற்காக பாடுபட்டு, தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணாவின் வழியில் தமிழ் இனத்தை இன்றும், என்றும் வாழவைக்கும் முதல்வர், முத்தமிழ் அறிஞர் கருணாநிதி, மக்களுக்கு பயந்து கொண்டு மருத்துவமனையில் படுத்து கொண்டிருக்கிறார் என்று வாய்க்கொழுப்போடு பேசிக் கொண்டிருக்கிறார்.
13ம் தேதி பாடம் புகட்டுவார்கள்...
கோடிக்கணக்கான தி.மு.க. தொண்டர்கள் மட்டுமல்ல, நாட்டில் உள்ள நல்லவர்கள், பெரியவர்கள், நடுநிலையாளர்கள், அறிஞர்கள் என்று எல்லோரும் இந்த பெண்மணிக்கு பாடம் புகட்ட 13-ந் தேதியை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்தியாவில் பெருமையும், புகழுமிக்க எந்த தலைவரையும் இந்த ஆணவம் பிடித்த பெண்மணி விட்டு வைத்ததில்லை.
எல்லாமே எனக்கு எம்.ஜி.ஆர். தான் என்று ஒப்பாரி வைத்த இவர்தான், அவர் உயிருடன் இருந்தபோதே அன்றைய பிரதமர் அமரர் ராஜீவ்காந்திக்கு "எம்.ஜி.ஆர். முதல்-அமைச்சராக இருக்க லாயக்கற்றவர்'' என்று கடிதம் எழுதி உண்ட வீட்டிற்கு துரோகம் இழைத்தவர்.
அதுமாத்திரமின்றி, அண்ணா உருவாக்கிய கட்சியை 60 ஆண்டுகளும், அரசை 40 ஆண்டுகளும் காப்பாற்றி வளர்த்துக் காத்துவரும் கருணாநிதியின் 70 ஆண்டு உழைப்பும், இன்றும் உழைக்கும் திறமும் இல்லையானால், இந்த பெண்மணி, இப்படி மனித பண்பாடுகளை இழந்து பேசுகிற இடத்திற்கும் வந்திருக்க முடியாது என்பதையும், இந்த ஆணவத்திற்கும் அடக்க மற்ற தன்மைக்கும் வருகிற 13-ந் தேதி தமிழ் மக்கள் தக்க பாடம் புகட்ட இருக்கிறார்கள் என்பதை எம்.ஜி.ஆர். பெயரால் தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார் ஆர்.எம்.வீ.
-
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
75 வருட வரலாற்றில் முதன்முறை..DSV vs IPS! திண்டுக்கல்லில் நேருக்குநேர் மோதும் திமுக-அதிமுக மா.செ.கள் -
திநகர் தவெக வேட்பாளர் புஸ்ஸி ஆனந்துக்கு நான் பிரச்சாரம் செய்கிறேனா? எம்எல்ஏ கருணாநிதி விளக்கம் -
சிதறும் கிறிஸ்தவ வாக்குகள்? தமிழகத்தில் இதுவரை நடக்காத சைலண்ட் மாற்றம்! கள நிலவரம் என்ன? -
எடப்பாடி முதல்வராக கூடாது.. ஓ.எஸ்.மணியன் டார்கெட் அதுதான்.. அதிமுக நிர்வாகியின் பகீர் குற்றச்சாட்டு! -
பாஜக ‘டிக்’ அடித்த வேட்பாளர்கள் யார்? நாளை வெளியாகும் வேட்பாளர் பட்டியல்! சென்னை வரும் டெல்லி புள்ளி -
ரொம்ப மன உளைச்சல்.. மேடையிலேயே பதவியை ராஜினாமா செய்த அதிமுக நிர்வாகி.. கள்ளக்குறிச்சியில் பரபரப்பு -
பாஜக சிம்ப்ளி வேஸ்ட்.. திருமாவளவன் பெஸ்ட்.. புயலை கிளப்பிய வால்பாறை அதிமுக வேட்பாளர் ஆடியோ -
"ஈ அடிச்சான் காப்பி".. அதிமுக தேர்தல் அறிக்கையை காப்பியடித்த திமுக? எவ்வளவு ஒற்றுமை பாருங்க -
நாங்க 10000..அவங்க 8000 தான்! அத்தைக்கு மீசை வச்சா சித்தப்பா மாதிரி இருக்கு! திண்டுக்கல்லார் ராக்ஸ்! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள்












Click it and Unblock the Notifications