For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெ. தீர்க்கதரிச தலைவர்-கனடா தமிழர் பேரவை

By Staff
Google Oneindia Tamil News

ஸ்கார்பாரோ: தனி ஈழம் அமைப்பேன் என உறுதியாக கூறியுள்ள அதிமுக பொதுசெயலாளர் ஜெயலலிதா மக்களுக்காகவே தம்மை அர்ப்பணித்து நல்வழிகாட்டிய தீர்க்க தரிசனம் மிக்க தலைவர்களான அண்ணாத்துரை, காமராசர், எம்ஜிஆர் அவர்கள் வரிசையில் இடம் பெற்றுள்ளார் என கனடா தமிழர் பேரவை பாராட்டியுள்ளது.

இது குறித்து அந்த அமைப்பின் தலைவர் போராசிரியர் கலாநிதி ஸ்ரீ ரஞ்சன், ஜெயலலிதாவுக்கு அனுப்பிய கடிதத்தில்,

மாண்புமிகு தலைவி செல்வி ஜெயலலிதா அவர்கட்கு,

ஈழத்தமிழர்கள் படும் இன்னல் கண்டு அவர்கள் பால் கருணையும், அபிமானமும் கொண்டு அவர்களுக்காக நீங்கள் தொடர்ச்சியாக குரல் கொடுத்து வருவதற்கு கனடாவாழ் மூன்று லட்சம் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கனடா தமிழர் பேரவை நன்றி கூறுவதற்கு மிகவும் கடமைப்பட்டுள்ளது.

அன்னை இந்திராவின் பின் நீங்கள ஈழத்தமிழ் மக்களின் இன்னல்கண்டு அவர்கள் துயர் துடைக்க விழைவது மிகவும் இக்கட்டான ஒரு வராலாற்று காலகட்டத்தில் இருக்கும் ஈழத் தமிழ் மக்களுக்கு அவர்கள் எதிர்காலம் பற்றிய நம்பிக்கையினை தருகின்றது.

ஈழத்தமிழர்கள் தங்களது சுயநிர்ணய உரிமைக்காக 1948லிருந்து 1983 வரை நீண்டகால வன்முறையற்ற போராட்டங்களை நடத்திய போதிலும் பதிலாகப் பெற்றுக் கொண்டது இனத்துவேச சிங்கள அரசின் வன்முறையினையே.

இதன்பின்னர் பலவிதமான சாமதான பேச்சுவார்த்தைகள், ஒப்பந்தங்கள் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளினால் முன்னெடுக்கப்பட்ட போதிலும் அவை எவையுமே கைகூடாத நிலையில் இழந்துபோன இறைமையினை நிலைநாட்டுவதற்காக வேறு வழியின்றி ஈழத்தமிழ் மக்கள் சிங்கள அரசிற்கெதிரான ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கனடா, ஐக்கிய நாடுகள் சபை, ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா, மேலும் பல மேற்குலக நாடுகளின் கோரிக்கையினை ஏற்றுக்கொண்டு தாங்கள் தற்காப்புக்கான போரை விடுதலைப் புலிகள் நிறுத்திய போதிலும் இலங்கை அரசு அதனை நிராகரித்து தொடர்ச்சியாக தமிழ் மண்ணில் இரத்தக் களரியினை ஏற்படுத்திய வண்ணம் இருக்கின்றது.

கடந்த மூன்று மாதங்களில் கிட்டதட்ட 6500 தமிழ் மக்கள் இலங்கை அரசின் மிலேச்சத்தனமான வன்முறையினால் கொல்லப்பட்டும் 14 ஆயிரம் மக்கள் காயப்பட்டும் உள்ளனர். இன்னும் நாளாந்தம் மக்கள் கொல்லப்பட்டும் காயப்பட்டுக் கொண்டும் இருக்கின்றனர்.

குடும்பம் குடும்பமாக பூக்களும் பிஞ்சுகளுமாக அழிக்கப்படுகின்றனர். ஒன்றுமறியாப் பாலகர்கள் உடல் சிதறி இறந்து போகின்றனர். வானமே கூரையான திறந்த வெளிச்சிறைகளில் உண்ண உணவின்றி உடுக்க உடையின்றி உயிருக்கு உத்தரவாதம் இன்றி ஈழத்தமிழனம் தவிக்கின்றது.

மக்களுக்காகவே தம்மை அர்ப்பணித்து நல்வழிகாட்டிய தீர்க்க தரிசனம் மிக்க தலைவர்கள் அறிஞர் அண்ணாத்துரை, காமராசர், மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் வரிசையில் தங்களையும் உலகத் தமிழர்கள் வரலாற்றிலேயே ஒரு மிக முக்கியமான உரையாகக் கருதப்படுகின்றது.

பூமிப்பந்தில் தமிழர் வாழும் இடங்கள் அனைத்திலுமே இந்த உரை ஒரு தாரக மந்திரமாக அனைத்து வீடுகளிலும் திரும்பத்திரும்ப ஒலித்து கொண்டிருக்கிறது. தொலைகாட்சிகள், வானொலிகள் பத்திரிகைகள் இணையத் தளங்கள் ஆகியவற்றில் இவ்வுரைக்கு அதி முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது.

பல்கலைக்கழக தமிழ் மாணவர்கள் மத்தியி்ல் ஆய்வாளர்கள் அவைகளிலும் மிகப் பரபரப்பாக பேசப்படுகின்ற ஓர் உரையாக காணப்படுகின்றது.

உங்களது நல்லாட்சி தமிழக மக்களுக்கு கிடைக்க வேண்டும். உலகெங்கிலும் வாழும் தமிழ் மக்களுக்கும் உங்கள் ஆட்சி ஒரு தென்பையும் தைரியத்தையும் வழங்கும். எதிர்வரும் தேர்தலில் நீங்கள் மிகப்பெரிய வெற்றியைப்பெற எங்கள் நல்லாசிகள் உங்களுக்கு உரித்தாகட்டும்.

வாழ்க பாரத மணித்திரு நாடு! வாழ்க தமிழகம் !! வாழ்க தமிழ் ஈழம்!!! என அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X