ஆபாச போஸ்டர்-அஸம்கான் மீது ஜெயப்பிரதா புகார்

உ.பி. மாநிலம் ராம்பூரில் நடிகை ஜெயப்பிரதா போட்டியிட அமர்சிங் பெருவாரியான விருப்பத்தை தெரிவித்தார் முலாயம் சிங் யாதவிடம். ஆனால் இதை கடுமையாக எதிர்த்தார் அஸம்கான். இதனால் அமருக்கம், அஸமுக்கும் இடையே மோதல் மூண்டது. இருப்பினும் முலாயிடம் தனக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி ஜெயப்பிரதாவுக்கு சீட் வாங்கி விட்டார் அமர்.
இருந்தாலும் விடாத அஸம்கான் தொடர்ந்து குடைச்சல் கொடுத்துக் கொண்டே இருந்தார். ராம்பூர், அஸம்கானின் சொந்த ஊர் என்பதால் ஜெயப்பிரதாவின் பிரசாரத்திற்கு அவர் ஒத்துழைப்பு தரவில்லை. இதனால் அமர்சிங்கின் துணையுடன்தான் ஜெயப்பிரதா இங்கு அஸமின் எதிர்ப்பை சமாளித்து பிரசாரம் மேற்கொண்டார்.
அமர்சிங், அஸம்கான் மோதல் மேலும் மேலும் முற்றி வரும் நிலையில் அஸம்கான் மீது பரபரப்பு புகாரை சுமத்தியுள்ளார் ஜெயப்பிரதா.
தான் நிர்வாணமாக இருப்பது போன்ற போஸ்டர்களை தொகுதிக்குள் சுற்றுக்கு விட்டு வருகிறார் அஸம்கான் என்பதே அவரது குற்றச்சாட்டு.
இதுகுறித்து அவர் கூறுகையில், இதை நான் தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்லப் போகிறேன்.
எனது நிர்வாண போஸ்டர்களை தொகுதி முழுவதும் அனுப்பி வருவது மிகவும் தரக்குறைவான, கீழ்த்தரமான செயலாகும்.
ஏற்கனவே என்னைப் பற்றிய அவதூறு ஆபாச சிடிக்களை தொகுதி முழுவதும் அவர்கள் விநியோகித்தார்கள். இப்போது ஆபாச போஸ்டர்களை அனுப்பி வருகின்றனர்.
இதை நான் வெறுக்கிறேன். ஒரு பெண்ணை இப்படி அவமானப்படுத்தி, அசிங்கப்படுத்தக் கூடாது. இப்படி செய்தால் நாளை எந்தப் பெண்ணும் அரசியலுக்கு வரத் தயங்குவார்.
என்னை மக்கள் நிபந்தனையின்றி ஆதரிக்கின்றனர். ஆனால் கட்சிக்குள் இருக்கும் சிலரே இப்படி நடந்து கொள்வது வேதனையைத் தருகிறது. இது மிகவும் ஏமாற்றமாகவும், வெறுப்பாகவும் இருக்கிறது.
அஸம்கான் எனக்கு அண்ணன் மாதிரி. ஆனால் அவரோ இவ்வளவு கீழ்த்தரமாக நடந்து கொள்கிறார். பெண்களை அவமதிக்கும் வகையில் அவரது செயல்பாடுகள் உள்ளன.
அவர்கள் வெளியிட்ட ஆபாச சிடியை நான் இதுவரை பார்க்கவில்லை. ஆனால் ஆபாச போஸ்டரைப் பார்த்து அதிர்ந்து போய் விட்டேன். அது மிகவும் மோசமான ஒன்றாக உள்ளது என்றார் ஜெயப்பிரதா.
உ.பி. அரசியலில் அஸம்கான், அமர்சிங் இடையிலான மோதல் பெருமளவுக்கு கட்சிப் பெயரை நாறடித்து வருவது குறித்து யார் பக்கம் சாய்வது என்று தெரியாமல் கட்சித் தலைவர் முலாயம் சிங் பெருத்த அமைதியாக இருக்கிறார்.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications