3வது அணி வந்தால் 3 மாதத்தில் தேர்தல்-கனிமொழி
நாகர்கோவில்: மூன்றாவது அணி ஆட்சிக்கு வந்தால் அடுத்த மூன்று மாதத்தில் மீண்டும் தேர்தல் வரும் என திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி தொகுதி திமுக வேட்பாளர் ஹெலன் டேவிட்சனை ஆதரித்து கனிமொழி தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில்,
சுய உதவிக்குழுக்கள் மூலம் பெண்களுக்கு தனி இடத்தை திமுக அரசு உருவாக்கி தந்துள்ளது. முதல்வர் கருணாநிதி 1 ரூபாய்க்கு 1 கிலோ அரிசி திட்டத்தை மக்களுக்கு கொண்டு வந்துள்ளார். ரூ. 7 ஆயிரம் கோடி விவசாய கடனை தள்ளுபடி செய்துள்ளார்.
வாழ்க்கையின் அடிமட்டத்தில் வாழும் மக்களுக்காக இந்த அரசு நல்ல பல திட்டங்களை நிறைவேற்றியுள்ளது. மீனவர்களுக்கு வழங்கப்படும் மானிய விலை டீசலை 1000 லிட்டரிலிருந்து 1500 லிட்டராக உயர்த்தியுள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியில் மதமாற்ற தடைச்சட்டத்தை கொண்டு வந்த ஜெயலலிதா, சிறுபான்மை மக்களின் அடிப்படை உரிமைகளை பறித்தார். பறிக்கப்பட்ட உரிமைகளை மீண்டும் பெற்று தந்தவர் கருணாநிதி.
மூன்றாவது அணியில் 15 பேர் பிரதமர் பதவிக்கு உள்ளனர். அவர்கள் ஆட்சிக்கு வந்தால் 3 மாதத்தில் மீண்டும் தேர்தல் வரும்.
அப்படி தேர்தல் வந்தால் நாட்டின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும். தொழில்வளம் குன்றிவிடும். தீவிரவாதம் வளரும்.
எனவே மத்தியில் நிலையான ஆட்சியை கொடுக்க ஜனநாயக முற்போக்கு கூட்டணியால் மட்டுமே முடியும் என்றார்.
-
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
அமைச்சர் ராஜ்மோகனுக்காக.. அகற்றப்பட்ட கலைஞர் படம்.. கடும் எதிர்ப்பால் மீண்டும் வைக்கப்பட்டது! -
அமைச்சர் ராஜ்மோகனுக்காக கருணாநிதி புகைப்படம் அகற்றமா? கொந்தளித்த வைரமுத்து.. என்ன நடந்தது? -
மாஸ்டர் பிளான் போட்ட கருணாநிதி.. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செங்கற்களில் அன்று நடத்திய சரித்திரம் -
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து












Click it and Unblock the Notifications