தூத்துக்குடியில் திமுக-அதிமுக மோதல்-15 பேர் மீது வழக்கு
தூத்துக்குடி: தூத்துக்குடியில் தேர்தல் பிரசாரத்தின் போது திமுக, அதிமுகவை சேர்ந்த தொண்டர்கள் மோதி கொண்டனர். இதையடுத்து போலீசார் இரு கட்சியையும் சேர்ந்த 15 பேர் மீது வழக்கு தொடர்ந்துள்ளனர்.
தூத்துக்குடியில் திமுக சார்பில் ஜெயதுரையும், அதிமுக கூட்டணி சார்பில் சிந்தியா பாண்டியனும் போட்டியிடுகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக அப்பகுதியில் அந்தந்த கட்சி பிரமுகர்களும், தொண்டர்களும் பிரச்சாரம் செய்து வந்தனர்.
இந்நிலையில் பிரச்சாரத்தின் போது தூத்துக்குடி 12வார்டு திமுக கவுன்சிலர் சுரேஷ் என்பவருக்கும், அதே பகுதியை சேர்ந்த அதிமுக பிரமுகரான ஜான்சனுக்கும் நேற்று முன்தினம் தகராறு ஏற்பட்டது.
இதையடுத்து திரேஸ்புரம் பகுதியில் பிரச்சாரம் செய்து கொண்டிருந்த அதி்முக பேச்சாளர் கருணாநிதியை சிலர் தாக்கினர். அவர் அளித்த புகாரின் பேரில் திமுக வட்ட நிர்வாகி அருணா உள்பட 9 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இதை தொடர்ந்து தூத்துக்குடி மேட்டு பகுதியில் பிரச்சாரம் செய்த திமுகவினரை தாக்கியதாக அதிமுக பேச்சாளர் கருணாநிதி உள்பட 6 பேர் மீது திமுகவினர் புகார் கொடுத்தனர். இதையடுத்து அவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications