'குட்டி யானை' ஜெவுக்கு அருகதை இல்லை- ஸ்டாலின்

Subscribe to Oneindia Tamil

திருவாரூர்: தமிழக முதல்வர் கருணாநிதியை கேலி பேச குட்டி யானை ஜெயலலிதாவுக்கு அருகதை இல்லை என்று தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சரும், திமுக பொருளாருமான மு.க. ஸ்டாலின் கடுமையாக விமர்ச்சனம் செய்துள்ளார்.

நாகப்பட்டிணம் தொகுதி திமுக வேட்பாளர் விஜயனை ஆதரித்து திருவாரூரில் பிரசார பொதுக் கூட்டம் நடைபெற்றது. அதில கலந்து கொண்ட உள்ளாட்சித்துறை அமைச்சரும், திமுக பொருளாருமான ஸ்டாலின் பேசுகையில்,

தமிழகத்தில் முதல்வர் கருணாநிதியின் கருணையால் சிறப்பான ஆட்சி நடைபெறுகின்றது. தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றிய அரசாக திமுக அரசு திகழ்கிறது. மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு அரசு மூலம் பல சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

தேசிய வேலை உறுதியளிப்பு திட்டம், 2004ம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்டது. ஆனால் அவரது ஆட்சி காலத்தில் 3 ஆண்டுகளில் வெறும் ரூ. 3 கோடி தான் செலவிடப்பட்டுள்ளது.

ஆனால் கடந்த 3 ஆண்டுகால திமுக ஆட்சியில் ரூ. 1,696 கோடி செலவிடப்பட்டுள்ளது. தேர்தலுக்குப் பின் இத்திட்டத்தில் வேலை 150 நாட்களாகவும், கூலி ரூ. 100 ஆகவும் உயர்த்தப்படவுள்ளது. முதல்வர் கருணாநிதியை கேவலப்படுத்தியும், கிண்டல் செய்தும் ஜெயலலிதா பேசி வருகிறார். இதற்கு பல அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் முதல்வராக இருக்கும் ஜெயலலிதா அரசியல் நாகரிகமற்ற முறையில் பேசி வருவது வேதனையாக உள்ளது.
முதல்வர் கருணாநிதி அறுவை சிகிச்சை செய்து கொண்டும் ஓய்வு இல்லாமல் மக்களுக்காக உழைத்து வருகிறார்.

உலகமே பாராட்டும் வகையில் சட்டசபையில் 50 ஆண்டு காலம் சேவை செய்தவர் என்ற புகழ் பெற்றவர் கருணாநிதி. அவரை பற்றி பேச குட்டி யானை ஜெயலலிதாவுக்கு அருகதை இல்லை என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+