தேனியில் 37 பேருக்கு வாக்களிக்க தடை!
போடி: தமிழகத்தில் தேனி தொகுதியில் பல வாக்காளர்களுக்கு இரட்டை வாக்கு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்களில் கேரளாவில் வாக்களித்த 37 பேருக்கு தமிழகத்தில் வாக்களிக்க தேர்தல் ஆணையம் தடை விதித்தது.
தமிழ்நாடு, கேரளா எல்லையில் போடி, கம்பம் உள்ளிட்ட பகுதிகள். இப்பகுதியில் இருக்கும் ஏராளமான தமிழர்கள், கேரளாவை சேர்ந்த இடுக்கி மாவட்டத்தில் உள்ள பல்வேறு எஸ்டேட்களில் கூலிகளாகவும், தோட்டத் தொழிலாளர்களாகவும் வேலை பார்த்து வருகின்றனர்.
இவர்களில் பலர் கேரளா மற்றும் தமிழ்நாட்டு என இரண்டு இடங்களிலும் ரேஷன் கார்டு, ஓட்டுரிமை பெற்றுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த தேனி மாவட்ட கலெக்டர் முத்துவீரன், இடுக்கி மாவட்ட கலெக்டர் அசோக்குமார் சின்ஹாவிடம் ஆலோசனை நடத்தினார்.
அப்போது அங்கு வேலை பார்த்து வரும் தமிழர்கள் பலர் இடுக்கி தொகுதியி்ல் வாக்களித்து விட்டு தற்போது தேனி தொகுதிக்கு உட்பட்ட போடி பகுதியில் வாக்களிக்கவும் உரிமை பெற்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அந்த நபர்களை வாக்காளர் பட்டியலில் உள்ள புகைப்படம் மூலம் அடையாளும் காணும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதில் தேனி தொகுதியில் வாக்குரிமை கொண்டுள்ள 37 பேர் ஏற்கனவே கேரளாவில் வாக்களித்திருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர்களுக்கு தமிழகத்தி்ல் வாக்களிக்க தேர்தல் அதிகாரிகள் தடை விதித்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications