வாக்காளர்களுக்கு பணம்-திமுக எம்எல்ஏ சிறைபிடிப்பு
தேனி: தேனியில் வாக்காளர்களுக்கு பணம் வழங்க முயற்சி செய்ததாக கூறி போடி எம்எல்ஏ லட்சுமணனை அதிமுகவினர் சிறை பிடித்தனர். இதையடுத்து அங்கு வந்த போலீசார் எம்எல்ஏவை மீட்டனர்.
தேனி சமதர்மபுரம் பகுதியில் உள்ள வழக்கறிஞர் ஒருவரது அலுவலகத்துக்கு போடி திமுக எம்எல்ஏ லட்சுமணன், காங்கிரஸ் நகரத் தலைவர் சின்ஸ் மற்றும் நிர்வாகிகள் சிலர் இரவு நேரத்தில் வந்தனர். அங்கு அவர்கள் வாக்காளர்களுக்கு தலா ரூ. 50 வழங்க ஏற்பாடு செய்ததாக கூறப்படுகிறது.
வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கவே அவர்கள் வந்துள்ளார்கள் என்ற தகவல் அதிமுகவினர் இடையே வேகமாக பரவியது. இதையடுத்து அந்த பகுதியில் குவிந்த அதிமுகவினர் எம்எல்ஏ லட்சுமணன் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் இருந்த அலுவலக அறையின் ஷட்டரை கீழே இறக்கி மூடி சிறைபிடித்தனர்.
இது குறித்து அதிமுக வேட்பாளர் தங்கதமிழ்செல்வன் தொலைபேசி மூலமாக மாவட்ட கலெக்டர் முத்துவீரன், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் தேன்மொழி ஆகியோருக்கு புகார் தெரிவித்தார். இந்நிலையில் அங்கு வந்த போலீசார் சிறைபிடிக்கப்பட்ட லட்சுமணன் எம்எல்ஏவை பத்திரமாக மீட்டு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து அதிமுக நகரச் செயலர் முருகேசன் தலைமையில் அதிமுக நிர்வாகிகள் போலீசாருக்கு எதிராக கோஷமிட்டனர். இதனால் அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். மேலும் நகரச் செயலாளர் முருகேசன் மற்றும் அதிமுகவைச் சேர்ந்த சிலர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
-
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா?












Click it and Unblock the Notifications