வாக்காளர்களுக்கு பிரியாணி-சிக்கியது கறி!
மதுரை: மதுரை அரசரடி பகுதியில் வாக்காளர்களுக்கு பிரியாணி தயார் செய்ய முயன்றவர்களைப் போலீஸார் வளைத்தனர். அவர்கள் வைத்திருந்த கறி பறிமுதல் செய்யப்பட்டது.
பிரியாணி தயார் செய்வதற்காக கறியுடன் வந்த மீரான் உசேன் மற்றும் கார்த்திக் ஆகியோரை போலீஸார் வளைத்தனர். இதில் உசேன் தப்பி ஓடி விட்டார். கார்த்திக் மட்டும் பிடிபட்டார். அவரைக் கைது செய்த போலீஸார், காவல் நிலையத்திற்கு அவரை அழைத்துச் சென்றனர்.
பூத் ஏஜென்ட் வெளியேற்றம்..
உசிலம்பட்டியில் பூத் ஏஜென்ட்டாக செயல்பட்ட அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர், அதிமுக எம்.எல்.ஏவின் புகாரின் பேரில் அதிகாரிகள் வெளியேற்றினர்.
உசிலம்பட்டியில் உள்ள ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் காங்கிரஸ் சார்பில் பூத் ஏஜென்ட்டாக இருந்தார் மாயாண்டி. இவர் அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்.
இன்று காலை இந்த சாவடிக்கு அதிமுக எம்.எல்.ஏ மகேந்திரன் ஓட்டுப் போட வந்தார். அவரிடம், மாயாண்டி ஐடி கார்டு இருக்கா என்று கேட்டுள்ளார். இதனால் கடுப்பான மகேந்திரன், அரசு ஊழியரான மாயாண்டியை எப்படி பூத் ஏஜென்ட்டாக அனுமதிக்கலாம் என ஆட்சேபனை எழுப்பி தேர்தல் அதிகாரிகளிடம் புகார் கூறினார். இதையடுத்து மாயாண்டியை பூத்திலிருந்து அதிகாரிகள் வெளியேற்றினர்.
ரேஷன் கார்டுகளுக்கு அனுமதி இல்லை..
வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் 13 வகையான ஆவணங்களைக் கொண்டு வரலாம் என அறிவி்கப்பட்டுள்ளது. இருப்பினும் இதில் ரேஷன் கார்டு இடம் பெறவில்லை.
ஆனால் இது தெரியாமலோ அல்லது தெரிந்தோ பல வாக்காளர்கள் ரேஷன் கார்டுகளுடன் வருகின்றனர். அவர்களை வாக்களிக்க அனுமதிக்காமல் தேர்தல் அதிகாரிகள் திருப்பி அனுப்பி வருகின்றனர்.
உசிலம்பட்டி அருகே எழுமலையில் ஏராளமான பேர் ரேஷன் கார்டுகளுடன் வாக்களிக்க வந்தனர். ஆனால் அவர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படவில்லை.
வாக்காளர்களுக்கு கம்ப்யூட்டர்: சுயேச்சை கைது
திருப்பூர் தொகுதி சுயேச்சை வேட்பாளரான கார்த்திகேயன் என்பவர், தான் போட்டியிடும் தொகுதி வாக்காளர்களுக்கு இலவச கம்ப்யூட்டர் தந்ததாக கூறி கைது செய்யப்பட்டார்.
திருப்பூர் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிடுபவர் கார்த்திகேயன். இவர் ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி பகுதியில் வாக்காளர்களுக்கு கம்ப்யூட்டர் வழங்குவதாக புகார்கள் வந்தன.
இதையடுத்து விரைந்து சென்ற போலீஸார் கார்த்திகேயன் மற்றும் அவரது ஆதரவாளர்களான ராஜேந்திரன், செந்தில், சுப்ரமணி, தேவ ஆசிர்வாதம், நவீன் குமார் ஆகியோரைக் கைது செய்தனர்.
பின்னர் இவர்கள் அனைவரும் சொந்த ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications