திண்டுக்கல்-வாக்குசாவடி அருகே திமுக பிரமுகர் கொலை
திண்டுக்கல்: திண்டுக்கல் தொகுதி சின்னாளபட்டி அருகே ஓட்டு போட வந்த ஒருவர் உறவினரால் குத்தி கொலை செய்யப்பட்டது, அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டி அருகே பூத்தம்பட்டியில் வசித்து வந்தவர் தங்கவேல் (48). அப்பகுதி திமுக கிளைச் செயலராக இருந்த அவர் வெள்ளோடு அருகே இருக்கும் பாப்பனம்பட்டியில் ஓட்டு போடுவதற்காக இன்று காலை சென்று கொண்டிருந்தார்.
வாக்குசாவடிக்கு அருகில் வந்த போது அதே ஊரை சேர்ந்த அதிமுக பிரமுகர் முத்துக்கண்ணன் என்பவர் வந்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த முத்துக்கண்ணன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் தங்கவேலை குத்தினார். பின்னர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
தங்கவேலு ரத்த வெள்ளத்தில் கிடப்பதை பார்த்தவர்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். உயிருக்கு போராடி கொண்டிருந்த அவரை அருகிலிருந்த தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் உயிர் பாதி வழியிலே பிரிந்தது.
அம்பாத்துறை போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். வாக்குசாவடி அருகே நடந்த இந்த துயர சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications