3வது அணி கூட்டம் - கெளடா வர மாட்டார் - திருப்பதி போகிறாராம்!
டெல்லி: அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க டெல்லியில் மே 18ம் தேதி கூட்டப்பட்டுள்ள 3வது அணித் தலைவர்கள் கூட்டத்தில் மதச்சார்பற்ற ஜனதாதள தலைவர் தேவே கெளடா கலந்து கொள்ள மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் அன்றைய தினம் திருப்பதிக்குப் போவதால் வர மாட்டாராம்.
3வது அணியிலிருந்து சில கட்சிகள் காங்கிரஸ் அல்லது பாஜக அணிக்குத் தாவக் கூடிய அபாயங்கள் அதிகரித்து வருகின்றன.
அதை உறுதி செய்வது போல தேவெ கெளடாவின் மகன் குமாரசாமி சமீபத்தில் சோனியா காந்தியை சந்தித்துப் பேசினார். இதனால் கெளடா தொடர்ந்து 3வது அணியில் இருப்பாரா அல்லது காங்கிரஸுக்கு ஆதரவு தருவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இந்த நிலையில், மே 18ம் தேதி டெல்லியில் கூட்டப்பட்டுள்ள 3வது அணித் தலைவர்கள் கூட்டத்தில் கெளடா பங்கேற்க மாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் அவர் திருப்பதி போவதால் வர இயலாத நிலை உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இருப்பினும் 17ம் தேதியன்று கெளடா, இடதுசாரி தலைவர்களை சந்தித்து ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.
சிபிஎம், சிபிஐ, பார்வர்ட் பிளாக், புரட்சிகர சோசலிஷ கட்சி ஆகியவற்றின் தலைவர்களை கெளடா சந்திக்கவுள்ளதாக அவரது கட்சியின் செய்தித் தொடர்பாளர் டேனிஷ் அலி தெரிவித்தார்.
மே 18ம் தேதி கெளடாவுக்குப் பிறந்த நாள். அன்றைய தினம் அவர் திருப்பதிக்குச் சென்று சாமி கும்பிடுவது வழக்கம். அதன்படியே அன்றைய தினம் கெளடா திருப்பதி செல்வதாகவும் டேனிஷ் அலி விளக்கியுள்ளார்.
கெளடாவுக்குப் பதில் தான் 3வது அணி கூட்டத்தில் பங்கேற்கவுள்ளதாகவும் அலி கூறியுள்ளார்.
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications