சிவகங்கை-இழுபறி தீர்ந்து ப.சிதம்பரம் வெற்றி
சிவகங்கை: சிவகங்கை தொகுதியில் பெரும் இழுபறிக்குப் பின்னர் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை தொகுதியில் ஆரம்பம் முதலே அதிமுகவின் ராஜ கண்ணப்பன்தான் முன்னிலையில் இருந்து வந்தார். மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பின் தங்கியிருந்தார்.
இறுதியில் ராஜ கண்ணப்பன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் பின்னர் ஆலங்குடி சட்டசபைத் தொகுதியில் வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி ஏற்பட்டதாக கூறி, ப.சிதம்பரம் 300 வாக்குகள் கூடுதலாக பெற்றதாக கூறப்பட்டது.
இதற்கு ராஜ கண்ணப்பன் எதிர்ப்பு தெரிவித்தார். ஆலங்குடி தொகுதியில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட வேண்டும் என அவர் கோரிக்கை வைத்தார்.
இதையடுத்து தேர்தல் முடிவு நிறுத்தி வைக்கப்பட்டு ஆலங்குடி தொகுதி வாக்குகள் எண்ணப்பட்டன. இதன் முடிவில் ப.சிதம்பரம் 3049 வாக்குகள் கூடுதலாக பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால் இதற்கும் அதிமுக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. முதலில் 300 வாக்குகள் கூடுதல் என்று கூறி விட்டு இப்போது 3000 வாக்குகள் கூடுதல் என்று கூறுவதால் மிகப் பெரிய மோசடி நடக்கிறது. எனவே மீண்டும் வாக்குகளை எண்ண வேண்டும் என அதிமுக வேட்பாளர் ராஜ கண்ணப்பன் கோரிக்கை விடுத்தார்.
இதையடுத்து மறுபடியும் ஆலங்குடி தொகுதி வாக்குகள் எண்ணப்பட்டன. இறுதியில், 3354 வாக்குகள் வித்தியாசத்தில் ப.சிதம்பரம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
வாக்குகள் விவரம்..
ப.சிதம்பரம் - 3,34,348.
ராஜ கண்ணப்பன் - 3,30,994.
-
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications