நாளை கூடவிருந்த 3வது அணி கூட்டம் ரத்து
Subscribe to Oneindia Tamil
டெல்லி: நாளை டெல்லியில் நடைபெறுவதாக இருந்த 3வது அணித் தலைவர்கள் கூட்டம் ரத்து செய்யப்பட்டு விட்டது.
லோக்சபா தேர்தல் முடிவுகள், 3வது அணித் தலைவர்களுக்கு எந்த வேலையும் வைக்காமல் விட்டு விட்டது. தேர்தல் முடிவுகளால் 3வது அணித் தலைவர்கள் பெரும் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர்.
பெரிய முடிவை எதிர்பார்த்திருந்த அவர்கள் நாளை டெல்லியில் கூடி ஆலோசனை நடத்த திட்டமிட்டிருந்தனர். ஆனால் இப்போது அதற்கு வேலை இல்லை என்பதால் நாளைய கூட்டத்தை ரத்து செய்து விட்டனர்.
இவர்கள் கூட்டம் நடத்தியிருந்தாலும் கூட இடதுசாரிகளைத் தவிர வேறு யாரும் பங்கேற்றிருப்பார்களா என்பதே சந்தேகம் தான்.












Click it and Unblock the Notifications