ஸ்ரீபெரும்புதூர் போக வேண்டாம் - சோனியா குடும்பத்துக்கு ஐபி எச்சரிக்கை
டெல்லி: விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு எதிரான இலங்கை ராணுவத்தின் நடவடிக்கை வெற்றி பெற்றுள்ளதால், ராஜீவ் காந்தி நினைவு நாளன்று ஸ்ரீபெரும்புதூர் போக வேண்டாம். அங்கு தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளதாக இந்திய உளவுப் பிரிவு, சோனியா காந்தி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு அறிவுறுத்தியுள்ளது.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் வெற்றி பெற்று விட்டதாக இலங்கை அதிபர் ராஜபக்சே அறிவித்துள்ளார். இதனால் தமிழகத்தில் ஒரு விதமான இறுக்க நிலை காணப்படுகிறது.
இந்த நிலையில் வரும் 21ம் தேதி மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 18வது ஆண்டு நினைவு நாள் வருகிறது.
அன்றைய தினம், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்த சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் தீர்மானித்துள்ளதாக தெரிகிறது.
ஆனால் இலங்கையில் அசாதாரண நிலை நிலவுவதாலும், விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தக் கூடிய வாய்ப்புகள் இருப்பதாலும், ஸ்ரீபெரும்புதூர் போக வேண்டாம் என சோனியா குடும்பத்தினரை ஐபி எச்சரித்துள்ளது.
இருப்பினும் இதுவரை சோனியா குடும்பத்தின் ஸ்ரீபெரும்புதூர் பயணம் குறித்த தகவல் ஏதும் இல்லை.
ஸ்ரீபெரும்புதூரில்தான் 1991ம் ஆண்டு ராஜீவ் காந்தி மனித வெடிகுண்டுக்குப் பலியானார் என்பது நினைவிருக்கலாம்.
-
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications