மனித உரிமை மீறல்: இலங்கையை விசாரிக்க வேண்டும்-ஐரோப்பிய யூனியன்
பிரஸ்ஸல்ஸ்: இலங்கை அரசுப் படையினருக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடந்த போரின்போது நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து சுயேச்சையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஐரோப்பிய யூனியன் கோரிக்கை வைத்துள்ளது.
பிரஸ்ஸல்ஸ் நகரில் கூடிய ஐரோப்பிய யூனியன் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் இந்தக் கோரிக்கை வைக்கப்பட்டது.
கூட்டத்தில் பேசிய அமைச்சர்கள் பலரும், போரின் பெயரால் பெருமளவில் மனித உயிரிழப்பு ஏற்பட்டிருப்பது அதிர்ச்சியையும், துயரத்தையும் தருவதாக உள்ளது. மிகப் பெரிய அளவில் மனித உரிமை மீறல்கள் நடந்துள்ளன. நூற்றுக்கணக்கான குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர்.
யாரெல்லாம் சர்வதேச மனித உரிமைச் சட்டத்தை மீறி செயல்பட்டார்களோ அவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும்.
விடுதலைப் புலிகள் தீவிரவாதிகள், மனிதக் கேடயமாக அப்பாவி மக்களை பயன்படுத்துகிறார்கள் என்று கூறிக் கொண்டு இலங்கை அரசு மனித உரிமைகளை மீறும் வகையில் நடந்து கொள்ளக் கூடாது. அப்படி செய்யவும் முடியாது. அதைக் காரணமாகவும் அது கூறக் கூடாது.
இந்த நெருக்கடியைத் தீர்க்க ஐ.நா.வுடன் இணைந்து இலங்கை அரசு செயல்பட வேண்டும். ஐ.நா.வுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
போர்ப் பகுதிக்குள் மனிதாபிமானக் குழுக்கள், செஞ்சிலுவைச் சங்கப் பிரதிநிதிகள் குழுவை அனுப்ப இலங்கை அரசு ஒத்துழைக்க வேண்டும், அனுமதி அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications