பிரபாகரன்: பெரம்பலூரில் கருப்பு கொடி-கடையடைப்பு
Subscribe to Oneindia Tamil
பெரம்பலூர்: விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் மரணமடைந்ததாக கூறப்படுவதை அடுத்து பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகேயுள்ள வேப்பூரில் கருப்புக் கொடியேற்றி கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.
இந் நிலையில் இலங்கை ராணுவத்தின் நடவடிக்கைகளைக் கண்டித்தும், போரில் இறந்த விடுதலைப் புலிகளின் தலைவர்களுக்கு இரங்கல் தெரிவித்தும் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகேயுள்ள வேப்பூரில் கருப்புக் கொடியேற்றி கடையப்புப் போராட்டம் நடைபெற்றது
இதனால், வேப்பூர் பகுதியில் உள்ள பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. மேலும், கடைகளில் கருப்புக் கொடி ஏற்றப்பட்டிருந்தன. அத்துடன், அனைத்துக் கட்சிக் கொடிகளும் அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டன.
முன்னதாக, பிரபாகரன் மகன் சார்லஸ் அந்தோனியின் உருவ படத்துக்கு மாலை அணிவிக்கப்பட்டு, மௌன ஊர்வலம் நடைபெற்றது.












Click it and Unblock the Notifications