ஊட்டியில் 22 முதல் மூன்று நாள் மலர் கண்காட்சி

தமிழகத்தின் கோடை வாசஸ்தலமான ஊட்டியில் ஆண்டு தோறும் மே மாதம் மலர் கண்காட்சி நடக்கும். இந்த ஆண்டு மலர் கண்காட்சி வரும் 22ம் தேதி துவங்கி, மூன்று நாட்கள் நடக்கிறு.
மலர் கண்காட்சிக்காக தாவரவியல் பூங்காவின் நுழைவாயில் பகுதியில் சிறப்பு மலர் அலங்காரம் மற்றும் 10 ஆயிரம் மலர் தொட்டிகள் வைக்கும் பணிகள் சுறுசுறுப்படைந்துள்ளது.
சால்வியா, பெட்டுனியா, சாப்பனெரியா, மெரி கோல்டு, பேன்சி, பிளாக்ஸ், குட்டைரக சூரியகாந்தி, ஸ்டேடிஸ், நிமீசியா போன்ற மலர்கள் காட்சிக்கு வைக்கப்படுகின்றன.
இந்த மலர் கண்காட்சியில், இரண்டரை லட்சம் மலர் செடிகளில் மலர்கள் மலர்ந்து சுற்றுலா வருபவர்கள் வரவேற்க காத்துள்ளன. சுற்றுலா பயணிகளை கவர, கார்னேசன் மலர்கள் மூலம் புஷ்பக விமானம் நீலகிரி மலை ரயில் மற்றும் வள்ளுவர் கோட்டம் மாதிரிகள் அமைக்கப்படுகின்றன.
மலர்கள், காய்கறிகள், கனி வகைகள், மருத்துவச் செடிகள், மலர் செடிகள் மலர் அலங்காரப் போட்டி களில் 220 போட்டியாளர்கள் பங்கேற்க உள்ளனர். தனியார் மற்றும் அரசு நிறுவனங்கள் சார்பில் 15 அரங்குகள் அமைக்கப்பட உள்ளன.
இந்த விழாவில், வேளாண்துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மலர் கண்காட்சியை துவக்கி வைக்கிறார். நீலகிரி லோக்சபா தொகுதி எம்.பி. ராஜா, ஊரக வளர்ச்சித்துறை அமைசசர் பொங்கலூர் பழனிசாமி, கதர்வாரியத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications