சென்னை தொழிலதிபர் வீட்டில் 450 பவுன் நகைகள் கொள்ளை
சென்னை: சென்னையை சேர்ந்த தொழலதிபர் வீட்டில் 450 பவுன் தங்க நகைகளை மர்ம கும்பல் ஒன்று கொள்ளையடித்து சென்றது. போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.
சென்னையில் பாரிமுனை பகுதியில் இரும்பு ஏற்றுமதி வியாபாரம் செய்து வருபவர் ராஜேந்திரன் (40). இவரது இரும்பு ஏற்றமதி நிறுவனத்துக்கு சொந்தமாக டெல்லியிலும் ஒரு கிளை உள்ளது.
இவரது வீடு வளசரவாக்கம் ஜெயராம் காலனியில் இருக்கிறது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னதாக ராஜேந்திரன் தனது வீட்டை பூட்டிவிட்டு, குடும்பத்தாருடன் செங்குன்றத்தில் இருக்கும் தனது தங்கை வீட்டுக்கு சென்றுள்ளார்.
அவர்களை வீட்டை பூட்டு சென்றதை நன்றாக கவனித்த மர்ம கும்பல் ஒன்று வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்துள்ளது. பின்னர் வீட்டிலிருந்த 450 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றது.
இரவு வீட்டுக்கு திரும்பிய ராஜேந்திரன் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருப்பதையும், லாக்கரில் இருந்த 450 பவுன் தங்க நகைகள் காணாமல் போயிருப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதையடுத்து அவர் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தடவியல் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாயின் உதவியுடன் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
-
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications