சவூதி சிறையில் வாடும் கடையநல்லூர் தொழிலாளி
கடையநல்லூர்: கடையநல்லூர் பகுதியை சேர்ந்த தொழிலாளி ஒருவர் சவூதி அரேபியாவில் வெளி வேலை செய்த குற்றத்துக்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கடையநல்லூர் கிருஷ்ணாபுரம், ரகுமானியபுரமா பகுதியை சேர்ந்தவர் நயினா முகமது. இவர் சவூதி அரேபியாவில் உள்ள ஜித்தா நகரில் வேலை பார்த்து வந்தார்.
இந் நிலையில் அவர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டு கொடுமைப்படுத்தப்படுவதாக அவரது உறவினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அவரது உறவினர்கள் மிகுந்த கவலையில் இருக்கின்றனர்.
வேலைக்கு சென்ற இடத்தில் அதன் உரிமையாளர் சரிவர வேலை அளிக்காததாலும் சம்பளம் கொடுக்காததாலும் வெளி இடத்தில் வேறு வேலை பார்த்ததால் நயினா முகமது சவூதி அரேபியா போலீசில் சிக்கி சிறையில் இருப்பதாக கூறப்படுகிறது.
வெளிநாடுகளில் விசா வழங்கிய உரிமையாளர்களிடம் தான் வேலை பார்க்க வேண்டும் என்பது சட்டம். ஆனால் சிலர் கூடுதல் பணம் கிடைக்கும் என்பதால் ஓய்வு நேரம் மற்றும் விடுமுறை நாட்களில் வீடுகளை சுத்தம் செய்வது, கார் கழுவுவது போன்ற பணிகளை மேற்கொள்வது வழக்கம்.
இவ்வாறு வெளிநாடுகளில் வேலை செய்பவர்கள் போலீசில் பிடிபட்டு சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பப்படுவது உண்டு.
சவுதி அரேபியாவில் வெளி வேலை செய்து போலீசில் சிக்கி சிறையில் இருக்கும் நயினா முகமது கடந்த 2 மாதமாக சூரிய ஒளியைக் கூட காண முடியாமல் இருட்டான அறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், சரிவர உணவு, குடிநீர் இல்லாமல் மிகுந்த சித்ரவதைக்கு ஆளாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் நண்பர் மூலம் குடும்பத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனால் அவரது குடும்பத்தினர் கண்ணீரும், கம்பலையுமாக மிகுந்த வேதனையில் உள்ளனர். இதே போல வேலைக்கு சென்ற பலரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications