சமாஜ்வாடி பொதுச் செயலாளர் அஸம்கான் நீக்கம்
லக்னோ: சர்ச்சைக்குரிய சமாஜ்வாடி கட்சி பொதுச் செயலாளர் முகம்மது அஸம்கான் அக்கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
சமாஜ்வாடிக் கட்சியின் பொதுச் செயலாளர்களான அமர்சிங்குக்கும், அஸம்கானுக்கும் இடையே கடந்த சில மாதங்களாக கடும் சண்டை நடந்து வருகிறது.
இருவரும் சரமாரியாக புகார்களைக் கூறி வருகின்றனர். அதிலும், அமர்சிங் கடும் விரக்திக்குள்ளானார்.
ஜெயப்பிரதாவுக்கு சீட் வாங்கும் விவகாரத்தின்போது மோதல் பெரிதாக வெடித்தது. இருப்பினும் சீட் கிடைத்து, இப்போது ஜெயப்பிரதா ஜெயித்தும் விட்டார்.
இருந்தாலும் தேர்தல் பிரசாரத்தின்போது ஜெயப்பிரதாவின் ஆபாசப் படங்களையும், போஸ்டர்களையும் அஸம்கான் விநியோகித்ததாக ஜெயப்பிரதா பரபரப்பு புகார்களைக் கூறினார்.
இந்த அடிதடியால் சமாஜ்வாடி கட்சியின் பெயர் பெருமளவில் நாறியது. இது தேர்தல் முடிவுகளிலும் எதிரொலித்தது. எதிர்பார்க்கப்பட்ட அளவை விட மிகக் குறைந்த அளவிலேயே சமாஜவாடிக் கட்சியின் வெற்றி இருந்தது. இவர்களது சண்டையால் காங்கிரஸ் கட்சி பலனடைந்து விட்டது.
இந்த நிலையில் தேர்தல் தோல்விக்கு அஸம்கானின் போக்குதான் காரணம் என கட்சியின் பல்வேறு தரப்பினரும் முலாயம் சிங்கிடம் புகார் கூறி வந்தனர்.
இந்தச் சூழ்நிலையில் அஸம்கான் இன்று கட்சியை விட்டு 6 ஆண்டுகளுக்கு சஸ்பெண்ட் செய்யப்படுவதாக அறிவித்துள்ளது சமாஜ்வாடிக் கட்சி.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications