10ம் வகுப்பு தேர்வில் சாதனை படைத்த கைதிகள்
நெல்லை: பத்தாம் வகுப்புத் தேர்வில் பாளையங்கோட்டை சிறைக் கைதிகள் மூன்று பேர் ரேங்க் எடுத்து சாதனை படைத்துள்ளனர்.
தமிழகத்தில் 10 மத்திய சிறைகள் உள்ளன. சிறை கைதிகள் 10ம் வகுப்பு தேர்வு எழுத சிறைத்துறை டிஜிபி நடராஜன் அனுமதியளித்தார்.
அனைத்து சிறைகளிலும் 10ம் வகுப்பு தேர்வு எழுத விரும்பிய 137 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன் ஆசிரியர்கள் உதவியுடன் பாடங்கள் நடத்தப்பட்டு தேர்வுக்கு தயார் செய்யப்பட்டனர்.
பாளை மத்திய சிறை கைதிகள் 32 பேர் உள்பட 137 பேரும் மார்ச் மாதம் சென்னை புழல் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு அவர்கள் 10ம் வகுப்பு தேர்வு எழுதினர்.
இந்நிலையில் தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இதில் பாளை கைதிகள் 32 பேரில், இருவரின் தேர்வு முடிவு, தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 30 பேரில் 22 பேர் தேர்ச்சி பெற்றனர்.
இதில் மாநில அளவில் முதல் மூன்று இடங்களை (கைதிகளில்) பாளை மத்திய சிறை கைதிகள் பெற்றனர். மேலநம்பி தோப்பை சேர்ந்த தினகரன் என்பவர் 330 மார்க் எடுத்து முதலிடமும், உடையார்பட்டியை சேர்ந்த பேராட்சி என்பவர் 320 மார்க் எடுத்து 2வது இடமும், முத்துக்குட்டி 313 மார்க் எடுத்து முன்றாவது இடமும் பெற்றனர்.
தினகரன், பேராட்சி இருவரும் ஆயுள் தண்டனை கைதிகளாவர். அனைவரையும் சிறை கண்காணிப்பாளர் அறிவுடைநம்பி பாராட்டினார்.
ஆடிட்டராக விரும்பும் பியூலா
பத்தாம் வகுப்புத் தேர்வில், மாநிலத்திலேயே 2வது ரேங்க் பெற்ற நெல்லை பாளையங்கோட்டை மாணவி மேரி ஹெப்சிபா பியூலா தனது தந்தையைப் போலவே தானும் ஆடிட்டராக விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
பாளையங்கோட்டை சாராள் தக்கர் மேல்நிலைப்பள்ளி மாணவி மேரி ஹெப்சிபா பியூலா. இவர் 500க்கு 495 மார்க் எடுத்து மாநில அளவில் 2ம் இடம் பெற்றார்.
பாட வாரியாக அவர் பெற்ற மதிப்பெண்கள் -
தமிழ் 96, ஆங்கிலம்-99, கணிதம்-100, அறிவியல்-100, சமூக அறிவியல்-100. இவரது தந்தை ஜேம்ஸ் ஏசுபாதம் ஆடிட்டர். தாய் ஹேமாவதி ஆசிரியை.
பியூலா கூறுகையில், கடவுள் கிருபையால் 2ம் இடம் பிடித்தேன். இது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. நான் இரவு வெகுநேரம் படிக்க மாட்டேன். அதிகாலையில் எழுந்து படிப்பதே எனது வழக்கம். எனது தந்தையை போல ஆடிட்டராக விரும்புகிறேன் என்றார்.
-
நெல்லை அருகே லாரி மீது மோதி சிதறிய ஆம்னி பேருந்து.. 20 பேர் படுகாயம்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications