சீக்கியர்கள் அமைதி காக்க மன்மோகன் சிங் கோரிக்கை

வியன்னாவில் சீக்கியர்களில் இரு பிரிவினருக்கிடையே நடந்த மோதலில் மதகுரு ஒருவர் கொல்லப்பட்டார். இதையடுத்து பஞ்சாபில் பெரும் கலவரம் வெடித்துள்ளது. 2 பேர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளனர். பல மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சீக்கியர்கள் அமைதி காக்க வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள கோரிக்கையில், வியன்னாவில் ஏற்பட்ட சம்பவங்களைத் தொடர்ந்து பஞ்சாபில் வன்முறை வெடித்துள்ளது வேதனையைத் தருகிறது.
எதுவாக இருந்தாலும், அமைதியையும், மத நல்லிணக்கத்தையும் கடைப்பிடிக்க வேண்டியது முக்கியமானது.
எனவே பஞ்சாப் மக்களின் அனைத்துப் பிரிவினரும் வன்முறையை கைவிட்டு அமைதியை நிலை நாட்ட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் மக்கள் தங்களது வீடுகளுக்குள்ளேயே இருக்க வேண்டியது அவசியம். பாதுகாப்புப் படையினர் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட மக்கள் உதவி புரிய வேண்டும்.
சீக்கிய மதம் சகிப்புத்தன்மை, நல்லிணக்கத்தையே போதிக்கிறது. சீக்கிய மதத்தின் மத குருக்கள் அனைவருமே சகோதரத்துவம், சமத்துவம் மற்றும் நல்லிணக்கத்தையே போதிக்கிறார்கள்.
எனவே மத குருக்களின் போதனையை மக்கள் ஏற்று அதன்படி செயல்பட்டு, அமைதியையும், சட்டம் ஒழுங்கையும் பராமரிக்க ஒத்துழைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications