மீண்டும் அணு ஆயுத சோதனை நடத்தியது வட கொரியா
பியாங்யாங்: அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளின் கடும் எதிர்ப்பையும் மீறிய வட கொரியா மீண்டும் அணு ஆயுத சோதனையை நடத்தியுள்ளது. இதை அந்த நாடு இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இதுகுறித்து கொரிய செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், எங்களது விஞ்ஞானிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களின் கோரிக்கைக்கேற்ப, வட கொரிய குடியரசு மே 25ம் தேதியன்று அணு ஆயுத சோதனையை நடத்தியது. சுய பாதுகாப்புக்காக இந்த அணு ஆயுத சோதனை நடத்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம்தான் மீண்டும் அணு ஆயுத சோதனையை நடத்தப் போவதாக வட கொரியா எச்சரித்திருந்தது.
ஏப்ரல் 5ம் தேதி செயற்கைக் கோளை செலுத்துவதாக கூறி ஒரு ராக்கெட்டை ஏவியது வட கொரியா. ஆனால் இது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைச் சோதனை என அமெரிக்கா கூறியிருந்தது.
மேலும், வட கொரியா இதேபோன்ற சோதனைகளைத் தொடர்ந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்கா எச்சரித்திருந்தது. இந்த நிலையில், வட கொரியா தற்போது 2வது அணு ஆயுத சோதனையை நடத்தியுள்ளது.
இந்த சோதனை காரணமாக பல்வேறு நாடுகளில் நிலஅதிர்வுகள் உணரப்பட்டுள்ளன.
கிம்சாக் என்ற நகருக்கு அருகே நிலத்துக்கடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த அணு ஆயுத சோதனை நடத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் கழகம் தெரிவித்துள்ளது.
வட கொரியா முதல் முறையாக 2006ம் ஆண்டு அக்டோபர் மாதம் அணு ஆயுத சோதனையை நடத்தியது. அதை விட தற்போது செய்யப்பட்ட அணு ஆயுத சோதனை சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications