சென்னை: ஐடி நிறுவனங்கள் இடத்தேவை 25% குறைந்தது!

இதுகுறித்து பிரபல ரியல் எஸ்டேட் ஆலோசனை நிறுவனமான 'ஜோன்ஸ் லேங் லசால்லே மேகராஜி'ன் ரியல் எஸ்டேட் ஆய்வுப் பிரிவு அளித்துள்ள அறிக்கை:
சென்னையில் ஐடி துறைப் பணிகள் உள்ளிட்ட வணிக தேவைகளுக்காக 30 மிலிலியன் சதுர அடி இடம் காலியாக உள்ளது. அதாவது 15 முதல் 20 சதவிகித இடப் பரப்பு காலியாக உள்ளன. இந்த ஆண்டு அது இன்னும் அதிகரிக்கும் என்று தெரிகிறது.
ஐடி துறையில் ஏற்பட்ட வீழ்ச்சிதான் இதற்குக் காரணம். தேவையை விட கிட்டத்தட்ட இரு மடங்கு இடம் காலியாக உள்ளது சென்னையில். குறிப்பாக பழைய மகாபலிபுரம் சாலையில் இந்த ஆண்டு வணிக இடங்களுக்கான வாடகை குறைந்துள்ளதோடு, முன்பைவிட கூடுதலாக காலியிடங்கள் உள்ளதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது.
குறிப்பாக ஜிஎஸ்டி நெடுஞ்சாலையில் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அதிகரித்துள்ளதால், பழைய மாமல்லபுரம் சாலையில் ஐடி நிறுவனங்கள் வருவதும் குறைந்துள்ளதாம்.
அதிகரிக்கும் காலியிடத்தின் அளவு, ஐடி துறை வீழ்ச்சி போன்றவற்றால் இப்போது, குறிப்பிட்ட காலத்துக்கு வாடகையின்றி நிறுவனத்தை நடத்திக் கொள்ளும் சலுகையையும் இடத்தின் உரிமையாளர்கள் நிறுவனங்களுக்கு தரத் துவங்கியுள்ளனர். இருக்கிற வாடிக்கையாளரை தக்க வைத்துக் கொள்ளும் ஒரு முயற்சி இது என்கிறார்கள் ரியல் எஸ்டேட் துறை சார்ந்தவர்கள்.
சென்னைதான் என்றில்லை, இந்திய அளவிலும் இதே நிலை நிலவுவதாக தெரிவித்துள்ளது ஆய்வு முடிவு.
-
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
CBSE உள்பட தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணத்தை கேட்டிலேயே எழுதி வைக்க வேண்டும்.. தமிழகத்தில் உத்தரவு












Click it and Unblock the Notifications