பறவை மோதல்-விமானம் அவசரமாக தரையிறக்கம்
மும்பை: இந்தூரில் இருந்து மும்பை நோக்கி கிளம்பிய கிங்பிஷ்ஷர் விமானத்தில் பறவை மோதியதையடுத்து அந்த விமானம் மீண்டும் இந்தூரில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதையடுத்து பயணிகள் வேறு விமானத்தில் மும்பை அனுப்பி வைக்கப்பட்டனர்.
மத்திய பிரதேசத்தில் உள்ள இந்தூர் நகரில் இருந்து இன்று காலை 7.55 மணிக்கு ஐடி 3148 என்ற கிங்பிஷ்ஷர் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் மும்பை நோக்கி புறப்பட்டது. புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானத்தின் மீது பறவை மோதியது.
இதையடுத்து விமானம் மீண்டும் அவசரமாக இந்தூரில் தரையிறக்கப்பட்டது.
இது குறித்து கிங்பிஷ்ஷர் விமான நிறுவன செய்தித் தொடர்பாளர் கூறுகையில்,
பறவை மோதியதில் விமானத்தின் ஒரு என்ஜினின் நான்கு பிளேடுகள் சேதமைடந்துவிட்டன. இதை சரி செய்யும் பணியில் பொறியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். அந்த விமானம் விரைவில் மீண்டும் உபயோகத்துக்கு வரும் என்றார்.












Click it and Unblock the Notifications