சென்னை எலக்ட்ரானிக் கடையில் தீ: புகையில் சிக்கி 2 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை திருவான்மியூரில் எலக்ட்ரானிக் கடையில் ஏற்பட்ட பயங்கர தீயால் ஏற்பட்ட புகையில் சிக்கி இரு இளைஞர்கள் பலியானார்கள்.

திருவான்மியூரை சேர்ந்தவர் அசோக். இவர் எல்.பி சாலையில், எலக்ட்ரானிக் பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். அவருடைய கடையில் செய்யாறு அசனமாபேட்டையை சேர்ந்த லோகு என்ற லோகநாதன் (22), காஞ்சீபுரத்தை சேர்ந்த தமிழ் செல்வம் (26) ஆகியோர் வேலை பார்த்து வந்தனர்.

இருவரும் வெளியூர் என்பதால் கடையிலேயே தங்கியிருந்தனர். இரவு அங்கேதான் தூங்குவார்கள்.

நேற்று முன்தினம் இரவும் வழக்கம் போல ஷட்டரை இறக்கி விட்டு விட்டு உள்ளே தூங்கிக் கொண்டிருந்தனர்.

2 பேரும் கடையிலேயே தங்கி வேலைபார்த்து வந்தனர். இரவில் கடையிலேயே படுத்து உறங்குவார்கள். நேற்று முன்தினம் இரவும் வழக்கம் போல் கடையின் ஷட்டரை மூடி விட்டு கடைக்குள் தூங்கினார்கள்.

இந்த நிலையில் நேற்று அதிகாலையில் அருகில் இருந்த டிரான்ஸ்பார்மரிலிருந்து தீப்பொறிகள் தெறித்து விழுந்தன. இது கீழே கிடந்த குப்பையில் பட்டு தீப்பிடித்தது. இந்த நெருப்பு அருகில் இருந்த பிளாஸ்டிக் கடைக்குப் பரவி அது தீப்பிடித்து எரிந்தது.

இது அருகில் இருந்த எலக்ட்ரானிக் கடைக்கும் பரவியதில் அங்கும் தீப்பிடித்துக் கொண்டு. கரும்புகை மூட்டமும் ஏற்பட்டது.

தீயணைப்புப் படையினருக்குத் தகவல் போய் அவர்கள் விரைந்து வந்து தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது எலக்ட்ரானிக் கடைக்குள் சிக்கிக் கொண்ட இருவரும் ஷட்டரைத் திறக்க முடியாமல் பலமாக தட்டினர்.

இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் அதிர்ச்சி அடைந்து ஷட்டரை சிரமப்பட்டு திறந்தனர். உள்ளே பார்த்தபோது இரு இளைஞர்களும் மயக்க நிலையில் கிடந்தனர்.

உடனடியாக இருவரையும் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். பின்னர் ராயப்பட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் இருவரும் உயிரிழந்து விட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+