சென்னை விமானத்துக்கு குண்டு மிரட்டல்-மும்பையில் தரையிறக்கம்
சென்னை: மஸ்கட்டில் இருந்த சென்னை வந்து கொண்டிருந்த விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல் கடிதம் ஒன்று இருந்ததை அடுத்து அந்த விமானம் அவசரமாக மும்பையில் தரையிறங்கியது. பின்னர் அந்த மிரட்டல் உண்மையில்லை என கண்டுபிடிக்கப்பட்டு, மீண்டும் சென்னை வந்தது.
ஓமன் தலைநகர் மஸ்கட்டில் இருந்து நேற்று முன் தினம் 25ம் தேதி ஓமன் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் சென்னைக்கு வந்து கொண்டிருந்தது. அதில் 135 பயணிகளும், 7 ஊழியர்களும் இருந்தனர்.
மதியம் 2.30 மணிக்கு சென்னையில் தரையிறங்க வேண்டிய விமானம் மும்பைக்கு அருகில் வந்து கொண்டிருந்த போது, விமானத்தின் பாத்ரூமில் ஒரு மிரட்டல் கடிதம் ஒன்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதில் நீங்கள் அனைவரும் மரணமடைய போகிறார்கள் என எழுதப்பட்டிருந்தது.
இந்த தகவல் உடனடியாக விமான கேப்டனுக்கு தெரிவிக்கப்பட்டது. அவர் பயணிகள் மற்றும் ஊழியர்களின் நலனை கருத்தில் கொண்டு மதியம் 1.15 மணிக்கு விமானத்தை உடனடியாக தரையிறக்க முடிவு செய்தார்.
இதையடுத்து மும்பை விமான நிலையத்தில் அனுமதிபெற்று அந்த விமானம் தரையிறங்கியது. அங்கு மும்பை விமான பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் விமானத்தை முற்றிலுமாக சோதித்தனர். ஆனால், அதில் வெடிகுண்டு எதுவும் இல்லை. இதையடுத்து அந்த மிரட்டல் கடிதத்தில் கூறப்பட்டிருப்பது உண்மை அல்ல என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர் அந்த விமானம் மும்பையில் இருந்து இரவு 9.45 மணிக்கு கிளம்பி சுமார் 8 மணி நேரத்துக்கு மேல் தாமதாக சென்னை வந்தது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications