ரோட்டில் விழுந்த ஹால் டிக்கெட்-பஸ் மோதி மாணவி பலி
திண்டிவனம்: திண்டிவனம் அருகே ரோட்டில் விழுந்த ஹால் டிக்கெட்டை எடுக்ச் சென்ற கல்லூரி மாணவி ஒருவர் தனியார் பஸ் மோதி பரிதாபமாக பலியானார்.
திண்டிவனம் கற்பக விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்த செல்வம் என்பவரின் மகள் ராதிகா (21). இவர் தெள்ளாரில் உள்ள தனியார் கல்லூரியில் இறுதி ஆண்டு கணிதம் படித்து வந்தார்.
இவர் தேர்வு எழுதுவதற்காக திண்டிவனத்தில் இருந்து காஞ்சிபுரம் செல்லும் அரசு பஸ்சில் சென்றுகொண்டிரு்தார். ஊரல் கிராமம் அருகில் பஸ் சென்றபோது அவரது புத்தகத்தில் வைத்திருந்த ஹால் டிக்கெட் எதிர்பாராத விதமாக காற்றில் பறந்து, நடு ரோட்டில் விழுந்தது.
இதையடுத்து பஸ் நிறுத்தப்பட்டு, ராதிகா ஹால் டிக்கெட்டை எடுக்க ஓடினார். அப்போது வந்தவாசியில் இருந்து திண்டிவனம் நோக்கி வந்த ஒரு தனியார் பஸ் மின்னல் வேகத்தில் ராதிக மீது மோதியது. இதில் ராதிகா பலத்த காயமடைந்தார்.
அவர் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு ராதிகா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விபத்து தொடர்பாக திண்டிவனம் ரோஷனை போலீசார் வழக்கு பதிவு செய்து வந்தவாசி தாலுக்கா மும்முனி அம்மைப்பட்டு கிராமத்தை சேர்ந்த தனியார் பஸ் டிரைவர் சேட்டை( 34) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications