நெல்லை, தூத்துக்குடியில் சூறாவளி-7 லட்சம் வாழைகள் நாசம்
நெல்லை: நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் கடும் சூறாவளி காற்று வீசியதை அடுத்து சுமார் 7 லட்சம் வாழைகள் சாய்ந்து நாசமடைந்தன. இதன் மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது.
நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் நேற்று பலத்த சூறாவளி காற்று வீசியது. இந்த இரு மாவட்டங்களிலும் செழித்து வளர்ந்திருந்த லட்சக்கணக்கான வாழைகள் சுழற்றி அடித்த சூறாவளிக்கு காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் கீழே விழுந்து சேதமடைந்தன.
நெல்லை மாவட்டத்தில் களக்காடு, ஏர்வாடி, ராதாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்த சுமார் 4 லட்சம் வாழைகள் சாய்ந்து விழுந்தன.
அதேபோல் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தென்திருப்போரை, கடையனோடை, ஆத்தூர், கீரனூர், தலைவன்வடலி, சேர்ந்தபூமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 3 லட்சம் வாழைகள் சேதமடைந்தன.
இந்த இரண்டு மாவட்டத்திலும் சேர்ந்து மொத்தம் 7 லட்சம் வாழைகள் விழுந்து, நாசமாகியுள்ளன. இதன் மதிப்பு பல கோடி என்பதால் அப்பகுதி விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications