லாகூரில் மனித வெடிகுண்டு தாக்குதல்-35 பேர் பலி
லாகூர்: பாகிஸ்தானின் லாகூர் நகரில் அந் நாட்டு ராணுவ உளவுப் பிரிவான ஐ.எஸ்.ஐ. அலுவலகத்துக்கு அருகே இன்று காலை மனிதகுண்டு வெடித்ததில் 35 பேர் பலியாயினர், மேலும் 200 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
மால் ரோடு என்ற இடத்தில் பஞ்சாப் மாகாண சட்டசபைக்கும் காவல்துறை தலைமையகத்துக்கும் அருகே இந்த மனித வெடிகுண்டுத் தாக்குதல் நடந்தது.
மும்பையில் நடந்த தீவிரவாதத் தாக்குதலையடுத்து பாகிஸ்தான் அரசால் தடை செய்யப்பட்ட ஜமாத்-உல்-தாவா அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீது இன்று விசாரணைக்காக காவல்துறை தலைமையகத்துக்குக் கொண்டு வரப்பட இருந்த நிலையில் இத் தாக்குதல் நடந்துள்ளது.
இதனால் அவரை விடுவிக்கவே இந்தத் தாக்குதலை ஜமாத்-உல்-தாவா அல்லது தலிபான்கள் நடத்தியிருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது.
இந்த குண்டுவெடிப்பையடுத்து அப் பகுதியில் துப்பாக்கி சூடு சத்தமும் கேட்டது. 4 தீவிரவாதிகள் காவல்துறை தலைமைகத்தி்ல் புகுந்து போலீசார் மீது துப்பாக்கிச் சூடு நடந்தது.
இதையடுத்து தீவிரவாதிகளை எதிர்கொள்ள ராணுவம் வரவழைக்கப்பட்டது. இந்தக் கட்டடத்தின் அருகே உள்ள பள்ளியில் இருந்து குழந்தைகளை பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.
இந்த மனித குண்டுவெடிப்பில் 20க்கும் மேற்பட்ட வாகனங்களும் எரிந்து சாம்பலாயின.
இத் தாக்குதல் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் ஒருவரை பொது மக்களே பிடித்து அடித்து உதைத்தனர். அவரை போலீசார் மீட்டு கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications