அழகிரி டெல்லியிலும் பெயர் எடுப்பார்-தயாளு அம்மாள்

மதுரை வட்டார அளவிலேயே இருந்து வந்த மு.க.அழகிரிக்கு இப்போது ஏறுமுகம். முதலில் கட்சியில் முதன் முறையாக பதவியைப் பெற்றார் அழகிரி. லோக்சபா தேர்தலுக்கு முன்பாக தென் மண்டல திமுக அமைப்பாளராக நியமிக்கப்பட்டார்.
பின்னர் மதுரை தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். தன் மீது கட்சித் தலைமை வைத்த நம்பிக்கையை நிரூபிக்கும் வகையில் அபார வெற்றி பெற்றார். தமிழகத்திலேயே அதிக அளவிலான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற 2வது வேட்பாளர் அழகிரிதான்.
இந்த நிலையில் தற்போது கேபினட் அமைச்சர் பதவியையும் பெற்றுள்ளார் மு.க.அழகிரி.
பதவியேற்புக்காக டெல்லி வந்துள்ளார் மு.க.அழகிரி. அவருடன் அவரது மனைவி காந்தி அழகிரி மற்றும் குழந்தைகளும் வந்துள்ளனர். அழகிரியின் தாயாரும், முதல்வர் கருணாநிதியின் மனைவியுமான தயாளு அம்மாளும் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்துள்ளார்.
தமிழ்நாடு இல்லத்தில் தங்கியுள்ள தயாளு அம்மாள் மு.க.அழகிரி மீது மிகுந்த நம்பிக்கையுன் உள்ளார்.
அழகிரி அமைச்சராகப் பதவியேற்பது குறித்து தயாளு அம்மாள் கூறுகையில், தனது தந்தை பெருமைப்படும்படியாக அழகிரி நடந்து கொள்வார் என நம்புகிறேன். அவருக்கு நல்லதைச் சொல்லித்தான் வளர்த்துள்ளோம். அவரும் நல்ல பையன்தான். தனது தந்தைக்கு ஏமாற்றம் தர மாட்டார் என நம்புகிறேன்.
டெல்லியிலும், மத்திய அமைச்சராக நல்ல பெயரை சம்பாதிப்பார் அழகிரி என்று நம்புகிறேன் என்றார் தயாளு அம்மாள்.
-
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக











Click it and Unblock the Notifications