குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்திய 9ம் வகுப்பு மாணவி
ஆத்தூர்: சேலம் அருகே போலீசாரின் துணையுடன் தனக்கு நடக்கவிருந்த திருமணத்தை 9ம் வகுப்பு மாணவி தைரியமாக தடுத்து நிறுத்தினார்.
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே அறகளூரை சேர்ந்தவர் கதிரவன், சியமளா ஆகியோரின் மகள் புவனேஸ்வரி (14). இவர் அருகிலுள்ள பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார்.
கட்டிட வேலை செய்து குடும்பத்தை காப்பாற்றி வந்த கதிரவன் ஏழ்மை நிலை காரணமாக தனது மகள் புவனேஸ்வரியின் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு அவருக்கு ராசிபுரத்தை சேர்ந்த பாஸ்கர் (35) என்பவருடன் திருமணம் நிச்சயம் செய்தார்.
இவர்கள் இருவருக்கும் இன்று திருமணம் நடக்கவிருந்தது. இந்நிலையில் புவனேஸ்வரி நேற்று வீட்டிலிருந்து தப்பியோடி சேலம் மாவட்ட ஆதி திராவிட நல அலுவலரிடம் தனது திருமணத்தை தடுத்து நிறுத்துமாறு புகார் கொடுத்தார். இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
போலீஸ் சூப்பிரண்டு அந்த மாணிவியின் தந்தை கதிரவன், சியமளா ஆகியோர் காவல் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களிடம் மகளின் விருப்பப்படி அவரை தொடர்ந்து படிக்க வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
பெற்றோர்களும் மனம் திருந்தி திருமணத்தை நிறுத்தி விடுவதாகவும், புவனேஸ்வரியை அவரது விருப்பப்படி தொடர்ந்து படிக்க வைப்பதாக உறுதியளித்தனர். பின்னர் தனது மகளை அழைத்து கொண்டு வீடு திரும்பினர்.
புவனேஸ்வரி திருமணத்தை மறுத்ததை அடுத்து மாப்பிள்ளை பாஸ்கருக்கும், புவனேஸ்வரியின் உறவுக்கார பெண் ஒருவருக்கும் திருமணம் முடிந்தது.
-
நெல்லையில் பரபரப்பு.. ஜெராக்ஸ் எடுக்க வந்த பெண்களை ரகசியமாக படம் பிடித்த வாலிபர்! போலீஸ் வைத்த ஆப்பு -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications