முதலிடம்-மாணவருக்கு கம்ப்யூட்டர் வழங்கிய ஜெ
சென்னை: பத்தாம் வகுப்பு தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதித்த கன்னியாகுமரி மாணவருக்கு அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதா கம்ப்யூட்டர் ஒன்றை இலவசமாக வழங்கியுள்ளார்.
இது குறித்து அதிமுக தலைமையகம் வெளியிட்ட செய்திகுறிப்பில்,
பத்தாம் வகுப்பு தேர்வில் 496 மதிப்பெண் பெற்று மாநிலத்திலேயே முதலாவது இடம்பெற்ற கன்னியாகுமரி மாவட்டம், குமாரபுரம் பேரூராட்சி 14வது வார்டு அதிமுக உறுப்பினர் திருமதி.பி.மார்சிலின் மகன் பி.எம்.ஜோஸ்ரிஜன் நேற்று ஜெயலலிதாவை சந்தித்து ஆசி பெற்றார்.
அப்போது ஜெயலலிதா அந்த மாணவருக்கு கம்ப்யூட்டர் ஒன்றை பரிசாக வழங்கினார். ரூ. 20 ஆயிரம் ரொக்க பணத்தையும் பரிசாக அளித்தார். மேலும் அந்த மாணவரை பாராட்டினார். தொடர்ந்து சிறப்பாக படிக்க தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார். இதையடுத்து அந்த மாணவர் மற்றும் அவரது பெற்றோர் ஜெயலலிதாவுக்க நன்றி தெரிவித்து கொண்டனர்.
ஜெ.வை சந்தித்த தென்காசி எம்.பி...
அதிமுகவின் கூட்டணி கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தென்காசி தொகுதி எம்.பி. லிங்கமும் நேற்று மாலை ஜெயலலிதாவை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது கட்சியின் தேசிய கட்டுப்பாட்டுக் குழுத் தலைவர் நல்லக்கண்ணு, மாநில செயற்குழு உறுப்பினர் சேதுராமன் ஆகியோர் உடன் இருந்தனர் என அதில் கூறப்பட்டுள்ளது.
-
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்!












Click it and Unblock the Notifications