அத்வானியின் கமாண்டோ வீரர் விபத்தில் மரணம்

தேசிய பாதுகாப்பு படை பிரிவை சேர்ந்த கமாண்டோ வீரர் சேகர் ரதோட் (32). கடந்த 12 ஆண்டுகளாக தேசிய பாதுகாப்பு படையில் இருந்த அவர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு பாஜக மூத்த தலைவர் அத்வானியின் பாதுகாவலர்களில் ஒருவராக இருந்தார்.
இந்நிலையில் அவர் நான்கு நாள் விடுமுறையில் தனது சொந்து ஊரான கர்நாடக மாநிலம், பாகல்கோட் மாவட்டத்துக்கு வந்திருந்தார். நேற்று அவர் தனது உறவினர் ஒருவரை பார்க்க மங்களூரில் இருந்து 35 கிமீ., தொலைவில் இருக்கும் முடேபிட்ரே நகருக்கு சென்றார்.
அப்போது அவர் சாலையில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக லாரி ஒன்று அவர் மீது மோதியது. இதில் ரதோட்க்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அவரது நிலைமை தொடர்ந்து மோசமாகி வந்ததை அடுத்து டாக்டர்கள் அவரை மங்களூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ரதோட் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். அவருக்கு பிரபாவதி என்ற மனைவியும், இரண்டு வயது குழந்தையும் உள்ளது.
போலீசார் விபத்துக்கு காரணமான லாரி டிரைவர் மீது வழக்கு பதிவு செய்து, அவரை தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications