சேது திட்டத்தை நிறைவேற்றுவோம்-அழகிரி உறுதி

பதவியேற்பு விழா முடிந்தவுடன் நிருபர்களிடம் பேசிய அவர், மிக சகஜமாக ஆங்கிலத்தில் பேசி அசத்தினார். இவருக்கு ஆங்கிலம் தெரியுமா, இந்தி தெரியாத நிலையில் டெல்லியில் முக்கியமான அமைச்சரவையை இவரால் நிர்வகிக்க முடியுமா என்ற சந்தேகங்களுக்கு இதன் மூலம் முற்றுப் புள்ளி வைத்தார் அழகிரி.
மதவாத சக்திகளால் எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றுவோம் என்று திமுக தனது தேர்தல் அறிக்கையில் மக்களுக்கு உறுதிமொழி அளித்துள்ளது.
எனவே அதை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்குமாறு பிரதமரை தனிப்பட்ட முறையில் நேரில் சந்தித்து வலியுறுத்துவேன். மக்களுக்கு தந்த உறுதிமொழியை நிறைவேற்றுவோம்.
தமிழகத்தின் வளர்ச்சிக்கும் நாட்டின் வளர்ச்சிக்கும் திமுக அமைச்சர்கள் பாடுபடுவார்கள் என்றார்.
தடுமாற்றம் இல்லாத ஆங்கிலத்தி்ல் அழகிரி நிருபர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துக் கொண்டிருந்ததை அவரது தாயார் தயாளு அம்மாளும் சகோதரரான அமைச்சர் ஸ்டாலினும் புன்முறுவலுடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.
சேது சமுத்திர திட்டத்துக்கு கடந்த 2005ம் ஆண்டு பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் தலைமையில் அடிக்கல் நாட்டப்பட்டது.
கப்பல் போக்குவரத்து அமைச்சராக இருந்த பாலு அந்தத் திட்டத்தை வேகவேகமாக நிறைவேற்றிக் கொண்டிருந்த நிலையில் பாஜக, அதிமுகவால் வழக்குகள் தொடரப்பட்டு அந்தத் திட்டம் முடங்கியது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே இன்று மதுரை வரும் அழகிரிக்கு பிரமாண்டமான வரவேற்பு கொடு்க்க தென் மாவட்ட திமுகவினர் தடபுடல் ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
-
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன












Click it and Unblock the Notifications