உறுப்பினர் அட்டை அவசியம்-அதிமுகவினருக்கு ஜெ
சென்னை: அதிமுகவில் அடிப்படை உறுப்பினர்களாகத் தங்களைப் பதிவு செய்து, புதிய உறுப்பினர் அட்டை பெற்றுள்ளவர்கள் மட்டுமே, கட்சியின் அமைப்புத் தேர்தலில் போட்டியிட முடியும் என்று அக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அதிமுகவில் ஏற்கனவே உறுப்பினர்களாக உள்ளவர்கள் தங்களுடைய பதிவை புதுப்பித்துக் கொள்வதற்கும், கழகத்தில் புதிதாக உறுப்பினராக சேருவதற்கும், விண்ணப்பித்துள்ள அனைவருக்கும் வழங்கப்பட வேண்டிய உறுப்பினர் உரிமைச் சீட்டுகள் தலைமைக் கழகத்தில் தற்போது தயார் நிலையில் உள்ளது.
ஆகவே, விண்ணப்பப் படிவங்களை பூர்த்தி செய்து அதனை தலைமைக் கழகத்தில் ஒப்படைத்து ரசீது பெற்றுள்ள அனைவரும் தலைமைக் கழகத்திற்கு வந்து ரசீதை காண்பித்து, அதற்குரிய உறுப்பினர் உரிமைச் சீட்டுகளைப் பெற்றுக் கொள்ளலாம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அதிமுகவில் அடிப்படை உறுப்பினர்களாகத் தங்களைப் பதிவு செய்து கொண்டு புதிய உறுப்பினர் உரிமை அட்டை பெற்றுள்ளவர்கள் மட்டுமே, நடைபெறவுள்ள கழக அமைப்புத் தேர்தலில் போட்டியிடுவதற்கும், வாக்களிப்பதற்கும் தகுதி உடையவர்கள் ஆவார்கள் என்று கூறியுள்ளார்.
-
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications