நீதிமன்றத்தில் ஆள்மாறாட்டம்-2 எஸ்ஐகள் சஸ்பெண்ட்
நெல்லை: நெல்லை நீதிமன்றத்தில் ஆள்மாறாட்டம் செய்வதற்கு உதவி செய்த இரண்டு மதுவிலக்கு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர்கள் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளனர்.
நெல்லை தாழையுத்து செல்லம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மாடசாமி. கல்லிடைக்குறிச்சி டாஸ்மக் பாரில் வேலை செய்து வந்தார். கடந்த 20ம் தேதி ஆலங்குளம் மதுவிலக்கு போலீசார் அந்த பாரில் திடீரென்று சோதனை நடத்தி மாடசாமி மீது வழக்கு தொடர்ந்தனர்.
இந் நிலையில் நெல்லை மாலைநேர நீதிமன்றத்தில் மாடசாமியை ஆஜர்படுத்துவதற்கு பதிலாக குமார் என்பவரை ஆஜர் செய்தனர். விசாரணையின் போது இதை நீதிபதி கண்டுபிடித்தார்.
இதை தொடர்ந்து கோர்ட்டில் ஆள்மாறாட்டம் செய்ததாக நீதித்துறை உதவியாளர் வைத்தியலிங்கம், பாளையங்கோட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இவருக்கு உடந்தையாக இருந்த சேரன்மகாதேவியை சேர்ந்த மாரியப்பனும் கைது செய்யப்பட்டார்.
இந்த ஆள்மாறாட்டத்திற்கு ஆலங்குளம் மதுவிலக்கு போலீசார் உடந்தையாக இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து எஸ்பி ஆஸ்ரா கர்க் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில், மதுவிலக்கு சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் மாடசாமிக்கு பதில் குமாரை கோர்ட்டுக்கு அனுப்பி வைத்திருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து ஏட்டுகள் பாலமுருகன், தட்சணாமூர்த்தி, மனோகரன், ஆகியோர் சமீபத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மேலும் சவரிமுத்து, முத்துசாமி, வெள்ளத்துரை, திருவரன், பரமசிவன் ஆகிய 5 போலீஸ்காரர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
தொடர்ந்து நடத்திய விசாரணையில் எப்ஐஆரில் குமாரின் முகவரியும் போலியாக கூறிப்பிடப்பட்டிருந்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து மதுவிலக்கு சப்-இன்ஸ்பெக்டர்கள் கணபதி, ரெஜினா ஆகியோரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
ஆள் மாறாட்டம் வழக்கில் 2 சப்-இன்ஸ்பெக்டர்கல், 3 ஏட்டுகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பதும், 5 போலீசார் இடமாற்றம் செய்யப்பட்டிருப்பதும் காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications