தமிழர் பிரச்சினையின் அடிப்படைக்குத் தீர்வு காண வேண்டும் - எஸ்.எம்.கிருஷ்ணா

வெளியுறவுத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள எஸ்.எம்.கிருஷ்ணா முதல் வேலையாக இலங்கைக்கும், பாகிஸ்தானுக்கும் அறிவுரை கூறியுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் கிருஷ்ணா பேசுகையில், தமிழ் இனப் பிரச்சினைக்கு அடிப்படை எது என்பதைக் கண்டறிந்து அதைத் தீர்க்க இலங்கை அரசு தற்போது முன்வர வேண்டும். அனைத்து சமுதாயத்தினருக்கும் அதிகாரங்களைப் பகிர்ந்து தர வேண்டும்.
இலங்கையில் போர் முடிந்து விட்டதாக இந்திய அரசு கருதுகிறது. இப்போது பிரச்சினைக்கான காரணத்தை ஆராய்ந்து அதைத் தீர்க்க வேண்டிய நேரம் வந்து விட்டது.
இலங்கை அரசியல் சாசனத்திற்குட்பட்ட அதிகாரப் பகிர்வை தமிழர்கள் உள்ளிட்ட அனைத்து சமுதாயத்தினருக்கும் இலங்கை அரசு வழங்க வேண்டும். அதுதொடர்பான அரசியல் நடைமுறைகளை அந்நாட்டு அரசு தொடங்க வேண்டும்.
அனைத்து சமுதாயத்தினரும் சுதந்திரமாக நடமாட நாட்டில் சூழலை ஏற்படுத்த வேண்டும்.
இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களை மறு சீரமைக்கும் பணிகளில் இலங்கை அரசுடன் இணைந்து இந்தியா செயல்படும். பாதிக்கப்பட்ட மக்கள் மீண்டும், விரைவில் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவதற்குத் தேவையான நடவடிக்கைகளுக்கு இந்தியா உதவும் என்றார் அவர்.
அதேபோல பாகிஸ்தான் அரசு, தனது மண்ணை தீவிரவாதிகள் பயன்படுத்துவதற்கு அனுமதி அளிக்கக் கூடாது. அங்கிருந்தபடி செயல்படும் தீவிரவாத முகாம்களைக் களைய பாகிஸ்தான் அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கிருஷ்ணா கூறியுள்ளார்.
-
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications