தமிழக தலைவர்கள் என்னை வாழ்த்தினர்-ராஜபக்சே

இதுகுறித்து தி வீக் இதழுக்கு அவர் பேட்டி அளித்துள்ளார். அதில் ராஜபக்சே கூறியிருப்பதாவது:
இலங்கை ராணுவத்துடனான போரில் விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டு இருக்கிறார்கள். விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரை, தீவிரவாதத்துக்கு எதிராக தெற்கு ஆசியாவில் மேற்கொள்ளப்பட்டுள்ள பிரசாரத்தின் ஒரு பகுதிதான் என்று நான் நினைக்கிறேன்.
இந்தியாவுக்காக போரிட்டது இலங்கை...
உண்மையில் தீவிரவாதத்துக்கு எதிராக இந்தியாவுக்காக போரிட்டு விடுதலைப்புலிகளை நான் ஒழித்துக் கட்டி இருக்கிறேன். விடுதலைப்புலிகளுடனான போரில் இலங்கை அரசுக்கு ஆதரவு அளித்ததற்காக இந்திய பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் இந்திய மக்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
தேர்தலில் சோனியாகாந்தி வெற்றி பெற்றதைப்போல், போரில் நான் வெற்றி பெற்று இருக்கிறேன். தேர்தலில் வெற்றி பெற்ற சோனியா காந்திக்கு வாழ்த்து தெரிவித்து கடிதம் எழுதி இருக்கிறேன்.
போரின் போது இந்தியா அளித்த தார்மீக ஆதரவு மிகவும் முக்கியமானது ஆகும். இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் புதிய அத்தியாயம் தொடங்கும்.
போரில் இலங்கை அரசு வெற்றி பெற்ற பிறகு தமிழ்நாட்டைச் சேர்ந்த பல அரசியல்வாதிகள் எனக்கு வாழ்த்து தெரிவித்தார்கள்.
தமிழ்நாட்டில் உள்ள விடுதலைப்புலி ஆதரவாளர்களின் நிலைமை தேர்தலில் என்ன ஆனது? என்று பாருங்கள். விடுதலைப்புலிகளை ஆதரித்தவர்கள் தோல்வி அடைந்து விட்டனர். தீவிரவாத ஆதரவாளர்களுக்கு தமிழ்நாட்டு மக்கள் சரியான பதில் அளித்து விட்டார்கள்.
தமிழர்கள் பங்கு கொண்டுள்ள சில தொண்டு நிறுவனங்கள் மற்றும் உதவி நிறுவனங்களின் செயல்பாடுகள் சரியில்லாமல் உள்ளது. விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த வட பகுதியில் மக்கள் எவ்வளவு கஷ்டப்பட்டார்கள் என்பது அவர்களுக்கு தெரியாது.
தமிழ்நாட்டில் உறவினர்கள் உள்ளனர்...
தமிழ்நாட்டில் எனது உறவினர்கள் இருக்கின்றனர். எனவே அங்கு சென்று வர எனக்கு அழைப்பு தேவை இல்லை. குடும்ப ரீதியாக இந்தியாவுடன் எனக்கு தொடர்பு உள்ளது என்றார் ராஜபக்சே.
தமிழக தலைவர்கள் தன்னை வாழ்த்தியதாக கூறியுள்ள ராஜபக்சே, எந்தத் தலைவர் தன்னை வாழ்த்தினார் என்பதைத் தெரிவிக்கவில்லை.
அடுத்த வாரம் டெல்லி வருகை:
இந் நிலையில் ராஜபக்சே அடுத்த வாரம் டெல்லிக்கு வரவுள்ளதாக வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா கூறியுள்ளார்.
தமிழர்களுக்கான நிவாரணப் பணிகள் குறித்து அவர் பேச வரவுள்ளதாக கிருஷ்ணா கூறியுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications