காங்கிரஸை நம்பி திமுக-இல.கணேசன் பரிதாபம்
பழனி: ஒரு மகன், பேரனை மத்தியிலும், இன்னொரு மகனை மாநிலத்திலும் வைத்து ஆட்சி நடத்தப் பார்க்கிறார் கருணாநிதி என்று பாஜக மாநிலத் தலைவர் இல. கணேசன் கூறினார்.
பழனியில் நிருபர்களிடம் பேசிய அவர்,
திமுக செயற்குழு கூட்டப்பட்டு தான் கட்சியின் எந்த முக்கிய முடிவும் எடுக்கப்படும் எனக் கூறிவிட்டு இப்போது காங்கிரஸ் கட்சியின் பாணியில் முதல்வர் கருணாநிதி தனது மகன் ஸ்டாலினை துணை முதல்வராக ஆக்கியுள்ளார்.
ஒரு மகன், பேரனை மத்தியிலும், இன்னொரு மகனை மாநிலத்திலும் வைத்து ஆட்சி நடத்தப் பார்க்கிறார் கருணாநிதி.
இலங்கையில் தமிழர்கள் நிவாரண முகாமில் போதிய மருத்துவ வசதி, குடிநீர் வசதி, உணவு, இருப்பிடம் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இளைஞர்கள் பலர் விடுதலைப்புலிகளா என விசாரிக்க அழைத்து செல்லப்பட்டு காணாமல் போகின்றனர்.
கருணாநிதி தமிழக தமிழர்களுக்கு மட்டுமே குரல் கொடுக்கும் நிலையில் உள்ளார். முன்பு திமுகவை நம்பி காங்கிரஸ் இருந்தது. இப்போது காங்கிரஸை நம்பி திமுக உள்ளது. இதனால் அப்பாவி இலங்கைத் தமிழர்களுக்கு அவர் குரல் கொடுக்க முடியாது.
பாஜக தோல்வியடைந்ததற்கான காரணம் குறித்து விரைவில் சென்னையில் கூடி விவாதிப்போம் என்றார்.
-
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள்












Click it and Unblock the Notifications