ஆள் இல்லா கேட்-லாரி மீது ரயில் மோதல்!
கரூர்: கரூர் அருகே ஆள் இல்லா ரயில்வே கேட்டை கடக்க முயன்ற மண் லாரி பழுதாகி தண்டவாளத்தில் நின்றது. அப்போது அந்த வழியாக வந்த பயணிகள் ரயில், லாரி மீது பயங்கராமாக மோதியது.
கரூர் சுக்காலியூர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலைப் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக மண் ஏற்றி் வர ஒரு டிப்பர் லாரி ஏமூர் சீத்தப்பட்டிக்குச் சென்று கொண்டிருந்தது.
அதை டிரைவர் மாணிக்கம் (48) ஓட்டிச் சென்றார். ஏமூர் அருகே ஆளில்லா ரயில்வே கேட்டை லாரி கடக்க முயன்றபோது, தண்டவாளத்தின் குறுக்கே பழுதாகி நின்றுவிட்டது.
அப்போது, நாகர்கோவிலிருந்து கோவை செல்லும் பயணிகள் ரயில் அங்கு வந்து கொண்டிருந்தது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த டிரைவர் மாணிக்கம், லாரியிலிருந்து இறங்கி ஓடிவிட்டார்.
அடுத்த சில வினாடிகளில் லாரி மீது ரயில் மோதியது. இதில் பல மீட்டர் தூரம் வரை இழுத்துச் செல்லப்பட்ட லாரி அப்பளமாக நொறுங்கிவிட்டது. ஆனால், ரயிலுக்கு் பெரிய அளவில் சேதம் ஏதும் இல்லை.
இது குறித்து தகவல் அறிந்த ரயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் ஜெயபாண்டியன் மற்றும் ரயில் நிலைய அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.
மீட்புப் பணிகளுக்குப் பின்பு ரயில் புறப்பட்டுச் சென்றது. தப்பியோடிய லாரி டிரைவர் மாணிக்கம் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, இதே ரயில்வே கேட்டை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது ரயில் மோதியதில் பல குழந்தைகள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடதக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications