ராஜீவ் காந்தியைக் கொன்றது விடுதலைப் புலிகள் செய்த மிகப் பெரிய தவறு - ராஜபக்சே

இதுகுறித்து என்டிடிவிக்கு ராஜபக்சே அளித்துள்ள பேட்டியில், ராஜீவ் காந்தியை படுகொலை செய்ததன் மூலம் இந்தியாவிடமிருந்து கிடைத்து வந்த அனுதாபத்தையும், ஆதரவையும் இழந்து விட்டார் பிரபாகரன்.
அந்த சம்பவத்திற்கு முன்பு வரை இந்தியாவின் அனுதாபம் பிரபாகரனுக்கு இருந்தது. ஆனால் ராஜீவ் காந்தியைக் கொன்றதன் மூலம் அதை இழந்து விட்டார் பிரபாகரன்.
துப்பாக்கியால் எதையும் சாதிக்க முடியும் என நினைத்தார் பிரபாகரன். ராஜீ்வ் காந்தி அமைதியான தீர்வை ஏற்படுத்த முயன்றார். அதை பிரபாகரன் ஏற்கவில்லை. இதனால் ராஜீவ் காந்தி மீது கோபம் கொண்டார்.
யார் எந்தத் தீர்வைக் கூறினாலும் அதை ஏற்பதாக இல்லை. தன்னை ராஜா என்று அவர் நினைத்துக் கொண்டிருந்தார்.
அதேபோல புலிகள் செய்த இன்னொரு தவறு, இலங்கை ராணுவத்தின் பலனைக் குறைத்து மதிப்பிட்டது. இந்த மென்மையான நாட்டின் ராணுவ பலத்தை அவர்கள் கணிக்கத் தவறி விட்டார்கள்.
புலிகளுக்கு எதிரான கடைசி கட்டப் போரின்போது இந்தியாவிடமிருந்து எந்தவித நிர்ப்பந்தமும் எங்களுக்கு வரவில்லை. நண்பர்களுக்குள் நிர்ப்பந்தங்களுக்கும், நெருக்கடிகளுக்கும் இடமில்லை என்றார் ராஜபக்சே.












Click it and Unblock the Notifications