சென்னை-பினாங் புதிய விமான சேவை
Subscribe to Oneindia Tamil
ஜார்ஜ் டவுன்: மலேசியாவின் பினாங் மாகாணத்தில் இருந்து சென்னைக்கு விமான சேவையை துவக்க போவதாக ஏர் ஏசியா அறிவித்துள்ளது.
நேற்று ஏர் ஏசியா நிறுவனம் பினாங்கி்ல் இருந்து சிங்கப்பூருக்கு விமான சேவையை ஆரம்பித்தது. அப்போது ஏர் ஏசியா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தாதுக் செரி பெர்ணான்டஸ் கூறுகையில், பினாங் பகுதியில் இருந்து சென்னைக்கு புதிய விமான சேவையை இயக்க மலேசிய போக்குவரத்து அமைச்சகம் அனுமதி கொடுத்துள்ளது.
விரைவில் இந்த தினசரி விமான சேவை துவக்கப்படும்.
விமான போக்குவரத்து என்பது கடும் போட்டிகளை கொண்ட துறை. இதனால் எங்களது நிறுவனத்தின் செயல்பாடுகளை விரிவாக்க திட்டமிட்டுள்ளோம். குறைந்த கட்டணத்தில் மகிழ்ச்சியான விமான சேவையை தொடர்ந்து வழங்குவோம் என்றார்.












Click it and Unblock the Notifications