மிஸிஸிபியில் இந்திய மாணவருக்கு நேர்ந்த கொடுமை

மிஸிஸிபியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. முரளி கிருஷ்ணா, ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். தெற்கு மிஸிஸிபி பல்கலைக்கழகத்தில் எம்.எஸ். கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வருகிறார்.
தனது வருவாய்க்காக ஒரு பெட்ரோல் நிலையத்தில் உதவியாளராக பணியாற்றி வருகிறார். 17ம் தேதி இரவு கருப்பர் இனத்தைச் சேர்ந்த ஒருவர் அங்கு வந்தார்.
ஒரு பாட்டில் வாங்கிக் கொண்டு காசு கொடுக்காமல் காருக்குச் சென்றார். இதையடுத்து முரளி கிருஷ்ணா, அவரிடம் போய் காசு கேட்டார். ஆனால் கோபமடைந்த அந்த கருப்பர், முரளி கிருஷ்ணாவை தாக்கினார். பின்னர் கோபத்துடன் கார்க் கதவை மூடிய அவர் வேகமாக கிளம்பினார்.
அப்போது முரளி கிருஷ்ணாவின் மேல் கோட், கார்க் கதவில் சிக்கிக் கொண்டது. படுவேகமாக சென்ற காரில் சிக்கிக் கொண்டு இழுத்துச் செல்லப்பட்டார் முரளி கிருஷ்ணா.
சுமார் ஒரு கிலோமீட்டர் அளவுக்கு இழுத்துச் செல்லப்பட்ட நிலையில், இரவு ரோந்துப் போலீஸார் அங்கு விரைந்து வந்து காரை நிறுத்தி முரளியை மீட்டனர்.
படுகாயமடைந்த முரளி கிருஷ்ணா உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரைப் பார்ப்பதற்காக முரளியின் தாயார் அமெரிக்கா விரைந்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் இந்தியர்கள் மீது சரமாரியாக இனவெறித் தாக்குதல் நடந்து வரும் நிலையில், இப்போது அமெரிக்காவில் இந்திய மாணவர், தாக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
-
சிங்கப்பூரில் இந்தியாவை பாராட்டிய அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர்.. வியந்து போய் சொன்ன விஷயம் -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
பகலை விற்று வாங்கிய நள்ளிரவுப் பணம்! அமெரிக்க ஷிஃப்ட் வேலையின் உண்மையை உடைத்த புனே இளைஞர் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications